குறிச்சொற்கள் விருஷ்ணிகள்
குறிச்சொல்: விருஷ்ணிகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47
“அரசே, ஜராசந்தனின் அனைத்து தோல்விகளுக்கும் என் அனைத்து வெற்றிகளுக்கும் பின்னணியாக அமைந்தவை எங்களைப் பற்றிய பிழைமதிப்பீடுகளே” என்றார் இளைய யாதவர். “அவரை எப்போதும் மிகைமதிப்பீடு செய்தார்கள். அவரே அவரை அவ்வண்ணம் எண்ணிக்கொண்டார். மகதத்தின்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46
“சால்வனின் படைகள் தாக்கிய செய்தி வந்தபோது நான் அரசவையில் இருந்தேன். பறவைச்செய்தியுடன் அக்ரூரர் ஓடி அவைக்குள் நுழைந்து என்னை அடைந்து என் காதில் செய்தியை சொன்னார். அவர் சொல்லத் தொடங்கியதுமே நான் அனைத்தையும்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45
“ஒரு நகரத்தின் உள்ளம் இருள்வதை எப்படி கண்களால் பார்க்கமுடியும் என்று வியந்தபடியே துவாரகையின் வழியாக சென்றேன்” என்றார் இளைய யாதவர். “ஒவ்வொன்றும் இருண்டிருந்தன. வெண்மை கண்கூசவைக்கும் சுதைச்சுவர்களும் பளிங்குப்பரப்புகளும்கூட. அரண்மனைக்குள் நுழைந்ததும் அக்ரூரர்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44
திரௌபதியின் உருவம் தொலைவில் மறைவதுவரை தருமனும் இளைய யாதவரும் அமைதியாக அதை நோக்கியபடி அமர்ந்திருந்தனர். அவள் குடில்களுக்கு அப்பால் சென்றதும் தருமன் பெருமூச்சுடன் இயல்புநிலை அடைந்து திரும்பி இளைய யாதவரை நோக்கினார். அவர்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 21
பகுதி ஐந்து : நெற்குவைநகர்
முற்காலத்தில் யமுனைநதிக்கரையில் இரண்டு குலங்கள் இருந்தன. ஆதிபிரஜாபதி பிருகுவின் மரபில் வந்த பிருகர் என்று பெயருள்ள மூதாதை ஒருவர் காலத்தின் முதற்சரிவில் என்றோ இந்திரன் மண்மீது சுழற்றிவீசிய...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 35
அரண்மனைக்குச் சென்று மன்னரின் உடல்நிலை பற்றி ஆராய்ந்தான் வசுதேவன். உக்ரசேனரின் உடல்நிலை கம்சன் சொன்னதுபோல அணையும் தருவாயில் இருக்கவில்லை. அவன் அரண்மனைக்கூடத்துக்குச் சென்றபோது கலிங்கத்தில் இருந்து வந்திருந்த வைத்தியர்குழுவின் தலைவரான பிரபாகரர் வந்து...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34
மதுராபுரியில் வசுதேவன் காலையில் நீராடி ஆயர்குலத்துக்குரிய பசுவின் கொம்புகள் போன்ற செந்நிறத் திலகத்தை அணிந்து வெண்பட்டுச்சால்வையுடன் தன் மாளிகையின் முகமண்டபத்தை அடைந்தபோது தவிர்க்கவியலாத செய்திகளை மட்டும் கேட்டு ஆணைகளை விடுத்துவிட்டு உத்தரமதுராவுக்குச் செல்வதைப்பற்றித்தான்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29
இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 27
பகுதி ஆறு: தூரத்துச் சூரியன்
தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும்...