குறிச்சொற்கள் வியாசர்
குறிச்சொல்: வியாசர்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15
தென்குமரிக் கடலுக்குள் ஆழத்தில் இருந்து எழுந்து ஒளிகொண்டு நின்றிருந்த மகேந்திரமலையின் முடிமேல், ஒரு காலூன்றி ஓங்குதவம் செய்த கன்னியின் அடிச்சுவட்டில் அமர்ந்து, அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான சீர்ஷன் எனும் சூதன் கிருஷ்ண...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14
ஜனமேஜயனின் வேள்விப்பந்தலில் சூததேவராகிய உக்ரசிரவஸ் தன் ஏடுகளை படித்து முடித்து மூடி வைத்து அவற்றின் மேல் வலக்கையின் சுட்டுவிரல்தொட்டு அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்தார். வேள்விப்பந்தலில் முற்றமைதி நிலவியது. வேள்விச்சுடர் எரிந்துகொண்டிருந்தது.
வியாசர் தன் அமைதியை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8
வியாசரின் மாணவர் ஓலையிலிருந்து படித்துச் சென்றார். “எப்போதும் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்துகொண்டிருந்த பிரதீபன் என்னும் அரசன் கங்கையின் பிறப்பிடத்திற்குச் சென்று அங்கே நெடுங்காலம் தவமியற்றிக்கொண்டிருந்தான். அந்த அரசமுனிவன் வேதம் உரைத்துக்கொண்டிருக்கையில் அழகிய முகமும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7
பலி நிகழ்வுகளுக்குப் பின்னர் கங்கையின் பெருமணல் பரப்பில் அனைவரும் உண்டாட்டுக்கு அமர்ந்தனர். நீத்தோரை வழுத்தி நிறையுணவு உண்டு செல்வது என்பது தொல்மரபு. உண்டாட்டுக்குரிய ஓசைகளோ முகமன்களோ இல்லாமல் அனைவரும் அமைதியாக தங்களுக்குரிய இடங்களில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4
அஸ்தினபுரியின் பேரங்காடியை ஒட்டி உத்கலத்திலிருந்து வரும் வணிகர்களுக்காக அவர்களால் பணம் சேர்த்து கட்டப்பட்ட அந்நான்கடுக்கு மரமாளிகை ‘ரிஷபம்’ அமைந்திருந்தது. அதன் மேல் உத்கலத்தின் வணிகக் கூட்டமைப்பின் எருதுக்கொடி பறந்தது. மாளிகை முகப்பில் குபேரனின்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-2
அஸ்தினபுரியில் ஜனமேஜயனின் சர்ப்பசத்ர வேள்வியில் ஆயிரங்கால் பந்தலில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் மாணவர்களில் நாலாமவரான சுமந்து இறுதிச்சுவடியை படித்தார். “பாரதனே, ஆற்றலும் அறிவும் நுண்ணுணர்வும் நம்பிக்கையும் செல்வத்தால் விளைவன. செல்வம் அழியும்போது அவையும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-1
மதுரையில் பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியின் அவைக்கு வடபுலத்தில் இருந்து வந்த பாணன் கன்னங்கரிய உடலும், வெண்ணிறமான பற்களும் வெள்ளை விழிகளும் கொண்டிருந்தான். தன் பெயர் சீர்ஷன் என்று அவன் சொன்னான். அவனை அவைக்காவலர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39
பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 9
எப்போதுமே தனிமையை ஓர் அழுத்தமாகவே யுயுத்ஸு உணர்ந்து வந்தான். ஆனால் ஒன்று நிகழ்வதற்கு முன் அமையும் தனிமையை அவன் வியப்புடன் மீளமீள எண்ணிக்கொள்வதுண்டு. அப்போது...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-29
நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில்,...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-28
நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் சிறுகுடிலின் அறையில் தன்னை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த வியாசர் “என்ன நிகழ்ந்தது? துயின்றேனா? கனவா?” என்றார். “மீண்டீர்கள்” என்றார் இளைய யாதவர். வியாசர் “என்னை காட்டுக்குள் சூக்ஷ்மம் என்னும்...