குறிச்சொற்கள் லலிதை
குறிச்சொல்: லலிதை
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27
பகுதி ஒன்பது: 2. காத்திருத்தல்
விதைகோடி உறங்கும் வெண்பாலை நிலம் நான். விரிந்து வான் மூடிய வெறும்நீலப் பெருவெளி நீ. கருக்கொள்ளா அன்னையின் முலைததும்பும் அமுதம் நான். நெய்யுண்டு கனன்றாடி விண் எழுந்து விலகும் எரி நீ....
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22
பகுதி ஏழு: 3. அதுவாதல்
கொல்லும் குழல். கல்லைத் தொட்டெழுப்பி பெண்ணாக்கும் கழல். காரிரும்பின் உள்ளே கனிவெழுப்பும் தழல். காற்றாகி உருகி இசையாகிப் பெருகி நிறைந்திருக்கும் இருளே. குருதியுமிழ்ந்து இவ்வண்டப்பெருவெளியை ஈன்றிட்ட அருளே. என்...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 21
பகுதி ஏழு: 2. அகம் அழிதல்
முத்தமிட்டு மீட்டும் இசைக்கருவியென பிறிதொன்றில்லை. சிறகிலெழுந்த இசையை விஷக்கொடுக்கிலும் உணர்ந்த முதற்கருவண்டு முத்தமிட்டு முத்தமிட்டு துளைத்து எழுந்த பொன்மூங்கில் அறிந்திருக்காது மூங்கில்குலமே அதன் வழியாக இசைகொள்வதை. தன்னுள்...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20
பகுதி ஏழு: 1. ஆடை நெகிழ்தல்
“முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13
பகுதி ஐந்து: 1. பீலிவிழி
ஆயர்சிறுகுடிகளின் அடுக்குக்கூரை புல்நுனிப் பிசிறுகள்தான் வான்மழையின் வருகையை முதலில் அறிந்துகொண்டன. இளங்காலை எழுகையிலேயே சிட்டுக்குருவியின் சிறகதிர்வென அவற்றை காற்று மீட்டும் சிற்றொலி எழுந்துகொண்டிருந்தது. சூழ்ந்த மலர்க்கிளைகள் சிந்தைகூரும் யானைச் செவிகளென அசைவற்றிருக்க...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3
பகுதி ஒன்று: 3. முகிழ்முலை கனிதல்
முதற்கரிச்சான் காலையை உணர்வதற்குள் சிற்றில் மூலையில் புல்பாயில் எழுந்தமர்ந்த ராதை தன் சுட்டுவிரலால் தோழியைத் தீண்டி “ஏடி, லலிதை” என்றழைத்தாள். அவிழ்ந்த கருங்கூந்தல் நெற்றியில் புரள, அழிந்து...