குறிச்சொற்கள் ருத்ரன்

குறிச்சொல்: ருத்ரன்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79

78. காட்டுக்குதிரை ரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 78

77. எழுபுரவி கோசலத்தின் தலைநகர் அயோத்தியின் அத்தனை மாளிகைகளும் இருநூறாண்டு தொன்மையானவை. தெருக்கள் ஐநூறாண்டு தொன்மை கொண்டவை. நினைப்பெட்டா தொல்காலத்தில் சரயுவுக்குச் செல்லும் மழையோடைகளையே பாதையென்றாக்கி உருவானவை. ஆகவே மழைக்காலத்தில் தெருக்களில் நீர் சுழித்து...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18

18. மலர்ப்பகடை மலர்மரத்தின் அடிபோல உளம்கலந்திருக்க இடம் பிறிதொன்றில்லை. சூழும் மணம் எண்ணங்களை பறக்கச்செய்கிறது. அங்கிலாதாக்கி ஆட்கொள்கிறது. அவ்வப்போது உதிரும் இலைகளும் மலர்களும் தொட்டு திடுக்கிடச்செய்கையில் எழுந்துவரும் இவ்வுலகு மேலும் இனிதென்றாகிறது. சொற்களால் ஒருவரிடம்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17

17. நறுமணவேட்டை ருத்ரனின் குரல் கேட்டு அவன் விடிகாலையில் உடல்வெம்மை படர்ந்த மெல்லிய சேக்கையில் எழுந்தமர்ந்தபோதும் கனவுக்குள்தான் இருந்தான். “அரசே, முதற்பொழுது எழுந்துவிட்டது” என்று ருத்ரன் சொன்னான். காற்றில் சாளரக் கதவொன்று ர்ர் ர்ர்...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39

ஏழுமாத காலம் எண்ணி எண்ணி ஏங்கி வெந்து சுருங்கிய இந்திரனிடம் இந்திராணி சொன்னாள் “அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம் கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று அவ்வசுரனை காணுங்கள். அவனுடன்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38

பிரம்மகபாலத்தின் மலைக்குகைக்குள் மழைக்காற்று தழல்கெட்டு  கனல்கொண்டிருந்த எரிகுளத்தில் இருந்து பொறிஎழ வீசியது. செவ்வொளியில் குகைச்சுவர்கள் தசைப்படலமென சுருங்கி விரிந்து அதிர்ந்தன. செங்கனல்துளியை கைபொத்திப் பற்றி விரல் இடுக்குகளில் குருதியென அனல்வழிய வாயில் சேர்த்து...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10

பகுதி இரண்டு : அலையுலகு - 2 தன் ஒரு முகத்தை இன்னொரு முகத்தால் பார்க்கத் தெரிந்தவனை தெய்வங்கள் பார்க்கின்றன. மூன்று முகமுள்ள பேருருவனின் கதை இது. பிரம்மனின் உளம்கனிந்த மைந்தர்களில் முதல்வர் மரீசி....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 2 சிறு ஊற்று விழிகொண்டு சுரந்து நிறைவதுபோல் ஒவ்வொரு நாளும் எனத் திரண்டு அவளில் உருவானவை. அவளை அவளென ஒவ்வொரு கணமும் நினைவுறுத்துபவை. தனிமையிலோ நீராழத்திலோ கூட...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42

பகுதி எட்டு : பால்வழி அதிகாலையில் மார்த்திகாவதியை நெருங்கும்போதுதான் விதுரன் கண்விழித்தான். எங்கிருக்கிறோம் என்னும் எண்ணம் வந்த கணமே பாண்டுவின் நினைப்பும் வந்தது. மஞ்சத்தில் இருந்து எழுந்து அறைக்குள் சுழன்று கொண்டிருந்த குளிர்காற்றை உணர்ந்தான்....

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13

பகுதி மூன்று : எரியிதழ் அஸ்தினபுரியின் அக்கினிதிசையில் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த சோலை நடுவே மூங்கில் பட்டைகளால் பின்னப்பட்ட குளிர்ந்த தட்டிகளினாலும் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதமான சேற்றைக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை ஆதுரசாலையில் நூற்றியொரு...