குறிச்சொற்கள் ராஜசூயம்

குறிச்சொல்: ராஜசூயம்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80

அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தில் வடமேற்கு மூலையில் கலிங்கச்சிற்பி காளிகர் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்கள் தங்கள் ஆயிரம் மாணவர்களோடு நாற்பத்தெட்டு நாட்கள் இரவும் பகலுமென பணிபுரிந்து பன்னிரு படைக்களத்தை அமைத்து முடித்திருந்தனர். ஒன்றன்மேல் ஒன்று...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61

பீஷ்மர் கைகூப்பியபடி எழுந்தபோது அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “அவையோரே, இதற்கு அப்பால் எளியவனாகிய இம்முதியவன் உங்களிடம் எதுவும் சொல்வதற்கில்லை. என் மைந்தரின் உருவாக இங்கு அமர்ந்துள்ள அரசர் அனைவரிடமும் நான் சொல்வதொன்றே. பல்லாயிரம்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60

இந்திரப்பிரஸ்தத்திற்கு மேற்கே யமுனைக்கு அப்பால் மரக்கூட்டங்களின் நிழற்கடலுக்குள் சூரியன் சிவந்து மூழ்கத்தொடங்கினான். நகரின் அனைத்து காவல்கோட்டங்களிலும் மாலையை அறிவிக்கும் முரசுகள் முழங்கின. சங்குகள் கடல் ஒரு பறவையெனக் குரல்கொண்டதுபோல் கூவி அமைந்தன. ராஜசூயப்பந்தலின்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59

விறலியின் கதை முடிவடைந்தபோது கர்ணனும் ஜயத்ரதனும் அழுத்தமான தனிமை ஒன்றை அடைந்தனர். அவள் ஆடிக்கொண்டிருந்த கதையே தங்களின் நிலையழிவை உருவாக்கியதென்பதை அவர்கள் ஆழத்தில் உணர்ந்தனர். அது ஏன் ஏன் என எண்ணி முன்சென்ற...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58

உணவுக்குப்பின் வேள்விச்சாலையை சூழ்ந்திருந்த சோலைகளில் சென்று குழுமிய பெருவணிகரும், குடிமூத்தோரும், அயல்நாட்டினரும் மரங்களுக்கு அடியில் விரிக்கப்பட்ட ஈச்சையோலைப் பாய்களில் தங்கள் குடியும் சுற்றமும் சூழ அமர்ந்தனர். சிலர் படுத்து கண்ணயர்ந்தனர். சிலர் அவைநிகழ்வுகளையும்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57

இந்திரப்பிரஸ்த நகரின் வேள்விச்சாலையின் வலப்பக்கம் அமைந்திருந்த கோபுரத்தில் கண்டாமணி கீழிருந்து இளங்களிறொன்று இழுத்த வடத்தால் நாவசைக்கப்பட்டு “ஓம்! ஓம்! ஓம்!” என்று முழங்கியது. அவ்வோசையின் கார்வை நகரை நிறைத்தபோது  குடிகள் தெருக்களிலும் ஆலயமுற்றங்களிலும்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56

பகுதி ஒன்பது : மார்கழி மார்கழித்திங்கள் முதல்நாள் இந்திரப்பிரஸ்தப் பெருநகரியில் ராஜசூய வேள்விக்கான அறிவிப்பு எழுந்தது. இருள் விலகா முதற்புலரியில் மயில்நடைத்தாளத்தில் ஒலித்த விடிமுரசின் ஓசை அடங்கி, நூற்றியெட்டு முறை பிளிறி பறவைகளை வணங்கிய...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28

ராஜகிருஹத்தில் ஜராசந்தன் தன் புலவர்அவையில் நூலாய்ந்துகொண்டிருக்கையில் ராஜசூய வேள்விக்காக இந்திரப்பிரஸ்தத்தில் கொடிஏறிய செய்தி வந்தடைந்தது. ஓசையற்ற காலடிகளுடன் அவனை அணுகிய அமைச்சர் காமிகர் மெல்ல குனிந்து செவியில் அச்செய்தியைச் சொல்ல முகத்திலும் விழிகளிலும்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27

இந்திரப்பிரஸ்தத்தின் அரசியரிடம் ராஜசூயம் குறித்த அறிவிப்பு நிலைகொள்ளாமையையே உருவாக்கியது. அரசவை முடிந்து திரும்பும்போது கரேணுமதி “அவ்வண்ணமெனில் சேதிநாட்டுடன் போர் நிகழும். ஐயமில்லை” என்றாள். அவளருகே நடந்த விஜயை திரும்பிநோக்க “என் தமையன் ஒருதருணத்திலும்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25

ஆடிமுன் அமர்ந்து நாற்களமாடிக்கொண்டிருந்த திரௌபதி சிரித்துக்கொண்டு திரும்பி எழுந்து அறைக்குள் நுழைந்த தருமனையும் இளைய யாதவரையும் “வருக!” என்றாள். தருமன் சலிப்புடன் “படைப்பயிற்சிக்களம் அனல்போல பற்றி எரிகிறது. ஆவணி என்றால் மழைமுடிந்த இரண்டாம்...