குறிச்சொற்கள் யமன்

குறிச்சொல்: யமன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10

முரசுகளும் கொம்புகளும் முழங்கி ஓய்ந்தன. அவைநடைமுறைகளை அறிவிக்கும்பொருட்டு பட்டுத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்த இளம்நிமித்திகன் அறிவிப்பு மேடையில் ஏறினான். வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றி தலைவணங்கி, உரத்த குரலில் அவன் அஸ்தினபுரியின் குடிவரிசையை கூறினான். “பிறவா...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-46

இளைய யாதவர் உள்ளுணர்வால் அழைக்கப்பட்டு கதவைத் திறந்து வெளியே வந்தபோது அங்கே சுகர் நின்றுகொண்டிருப்பதை கண்டார். மண்படிந்த மெலிந்த ஆடையற்ற சிற்றுடல் புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குபோல் நறுமணம் கொண்டிருந்தது. சடைத்திரிகள் தோளில் பரவியிருந்தன....

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-45

பகுதி பதினொன்று : முழுமை நைமிஷாரண்யத்திற்கு வெளியே வந்த யமன் ஒவ்வொரு அடிக்கும் நின்று மூச்சிரைத்து மரங்களை பற்றிக்கொண்டு நடந்தார். தென்மேற்கு ஆலயமுகப்பை அடைந்ததும் நிலத்தில் அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டார். அவரை அணுகிய காலனாகிய ஓங்காரன் “அரசே,...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-43

பகுதி பத்து : பொருள் நைமிஷாரண்யத்திற்கு வெளியே காலதேவனின் ஆலயத்திற்கு வந்து அமர்ந்த யமனுக்கு அருகே அகோரன் என்னும் காலன் வந்து வணங்கினான். அவர் விழிதூக்கி நோக்க “குசேலரின் இறுதிக்கணத்தில் உடனிருந்தேன். அவர் உயிரை...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-36

பகுதி எட்டு : சுடர்வு யமன் நைமிஷாரண்யக் காட்டின் எல்லையைக் கடந்து சோர்ந்த அடிகளுடன் சென்று தன் ஆலயத்தின் முன் அமர, அங்கு அவரைக் காத்து நின்றிருந்த காலகையான துர்கமை அருகே வந்து வணங்கினாள்....

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-31

பகுதி ஏழு : மறைமெய் “அவன் பெயர் யுதிஷ்டிரன், குருவின் குடியில் விசித்திரவீரியனின் குருதிவழியில் பாண்டுவின் மைந்தனாகப் பிறந்தவன். இந்திரப்பிரஸ்தத்தின் முடிபெயர்ந்த அரசன். இப்போது உபப்பிலாவ்ய நகரியின் சிறிய அரண்மனையில் தன் பள்ளியறைக்குள் இருளை...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-23

பகுதி ஆறு : ஊழ்கம் நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வந்த யமன் ஆழ்ந்த தனிமையை உணர்ந்தார். அங்கு கிளைவிரித்து நின்றிருந்த மருத மரத்தடியில் கைகளை மார்பில் கட்டியபடி அடிமரத்தில் சாய்ந்து சூழ்ந்திருந்த கருக்கிருட்டை நோக்கினார். பின்னர்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-18

பகுதி ஐந்து : விடுதல் நைமிஷாரண்யத்தின் எல்லையை அடைந்த யமன் நின்று திரும்பி நோக்கி நெடுமூச்செறிந்தார். அவரருகே வந்த ஏவலனாகிய திரிதண்டன் “அரசே, நாம் திரும்புகிறோமா?” என்றான். யமன் “இல்லை, இது இங்கே இப்படி...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-14

நான்கு : அறிவு யமன் மூன்றாவது முறையாக வந்தபோது சிகண்டியின் வடிவிலிருந்தார். நைமிஷாரண்ய எல்லையில் அவருக்காகக் காத்திருந்த யமதூதனாகிய திரிதண்டன் “அரசே, நீங்கள் விரும்புவீர்கள் என்பதனால் இச்செய்தியுடன் காத்திருந்தேன்” என்றான். சினத்துடன் “நான் விரும்புவேன் என...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-10

மூன்று : ஒருமை நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வரும்வரை யமன் கர்ணனின் உருவில்தான் இருந்தார். கருக்கிருட்டில் தன் ஆலயமுகப்புக்கு வந்து அங்கிருந்து யமபுரிக்கு இமைக்கணத்தில் மீண்டார். உவகையுடன் தன் அரண்மனைக்குச் சென்று அதன் முதல்படியில் காலடி...