குறிச்சொற்கள் நமீபியா
குறிச்சொல்: நமீபியா
கருநிலம் – 7 [நமீபியப் பயணம்]
நமீபியா ஒரு பெரிய நாடு. அதைப் பொதுவாக மூன்று பெரும் நிலப்பகுதிகளாகப் பிரிக்கலாம். மேற்கே கடற்கரையை ஒட்டியபகுதி பாலைவனம். தெற்கே கொஞ்சம் வளமான ஆற்றுப்படுகைகள் உண்டு. அங்கே மக்காச்சோளம் பயிரிடுகிறார்கள். கிழக்கே உள்ள...
கருநிலம் – 6 [நமீபியப் பயணம்]
காலையில் எழுந்தபோது முந்தையநாள் ஒருசெக்கச்சிவந்த புன்னகைக்குள் தூங்கி எழுந்ததுபோல உணர்ந்தேன். விளக்கமுடியாத கனவுகள் வழியாகச் சென்ற தூக்கம். கூரைக்கூடாரத்துணி மேல் பொழிந்துகொண்டே இருந்த மணல் கனவுகளுக்குள் புகுந்தது. முன் தினம் மணலில் அலைந்தது...
கருநிலம் – 5 [நமீபியப் பயணம்]
செம்மணல்மலைகள் ஒவ்வொன்றுக்கும் எண்ணிடப்பட்டுள்ளது என்றார் டேவிட். நாற்பத்தைந்தாவது மணல்மலை உயரமானது, சாலையருகே இருப்பது. அதை வரும்போது பார்ப்போம். இப்போது சௌஸஸ்வெலி போவோம் என்றார். மணல்மலைகளின் ஊடாகச் சென்று ஒரு மையத்தை அடைந்தோம். அங்கேதான்...
கருநிலம் – 3 [நமீபியப் பயணம்]
அதிகாலையில் காருடன் வருவேன் என்று டேவிட் சொல்லியிருந்தார். உண்மையிலேயே அதிகாலையில் வந்துவிட்டார். பகலில் வெயில் இருந்தாலும் எல்லாப் பாலைநிலங்களையும்போல நமீபியாவின் இரவுகள் குளிரானவை. நேரக்கணக்கு குழம்பிவிட்டிருந்தமையால் இரவில் தூக்கம்பிடிக்காமல் பேசிக்கொண்டே இருந்தோம். ஆகவே...
கருநிலம் – 2 [நமீபியப் பயணம்]
ஜொகன்னஸ்பர்க் காந்தியின் வரலாற்றுடன் இணைந்து அடிக்கடி காதில் விழுந்த பெயர். அங்கே காலையில் சென்றிறங்கும்போது காந்தி நினைவுகளாகவே வந்துகொண்டிருந்தன. காந்தி ஒரு இளம் வழக்கறிஞராகத் தயக்கத்துடன் வந்து இறங்கும் காட்சியை நினைத்துக்கொண்டே இருந்தேன்....
கருநிலம் – 1 [நமீபியப் பயணம்]
சென்ற 4ஆம் தேதி காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மும்பைக்குக் கிளம்பினோம். கிளம்பிய அரைமணி நேரத்திலேயே ஒன்று தெரிந்தது, மாதவன்குட்டி ஒரு நிர்வாகி என்று. அவரது முதல் வெளிநாட்டுப்பயணம். ஆனாலும் பதற்றமே...
நமீபியா , நிஜமாகவே
சென்ற தேதி நம்பீபியாசெல்வதற்காக நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் திருவனந்தபுரம் ரயில்நிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை சென்றோம். மும்பையில் கோகுலம் மூவிஸின் ஓய்வுவிடுதியில் தங்கிவிட்டு நள்ளிரவில் கிளம்பி விமானநிலையம் சென்றோம். பெட்டியை பாலிதீன் தாளால்...
நமீபியா பயணம்
இன்று நமீபியா கிளம்புகிறேன்.ஆப்ரிக்காமீது எனக்குள்ள மோகம் அ.முத்துலிங்கத்தால் உருவானது. அவரது எழுத்துக்களில்வரும் ஆப்ரிக்கா ஒரு மெல்லிய வேடிக்கை கலந்த ஓர் உலகம். ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒரு பயணம் சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை.
நானும்...
நமீபியா
ஒரு மலையாளப்படத்துக்காக நமீபியா செல்லவிருக்கிறேன். இயக்குநருடன். அங்குள்ள மணல்மேடுகள் புல்வெளிகளைப்பார்க்கவேண்டியிருக்கிறது.
அதற்கான பயணமுகவர்கள் எல்லாமே ஹாலிவுட் அளவுக்கான பட்ஜெட் உள்ளவர்களையே மனதில்கொண்டிருக்கிறார்கள். அங்கே வேலைபார்க்கக்கூடிய, தொடர்புகள் இருக்கக்கூடிய நண்பர்கள் இருக்கிறார்களா? அதிக செலவில்லாமல் அங்கே...