குறிச்சொற்கள் தேகமுத்ராதரங்கிணி
குறிச்சொல்: தேகமுத்ராதரங்கிணி
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63
பகுதி பதின்மூன்று : இனியன் - 5
பீமன் காட்டுக்குள் அவன் வழக்கமாக அமரும் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்தான். அவனைச்சூழ்ந்து பின்பொழுதின் வெள்ளிவெயில் இலைத்தழைப்பின் விரிவுக்கு மேல் கால்களை ஊன்றி நின்றிருந்தது. காற்று வீசாததனால் இலைவெளி பச்சைநிறமான பாறைக்கூட்டம் போல...