குறிச்சொற்கள் திரௌபதி
குறிச்சொல்: திரௌபதி
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13
குகையின் இருள் மேலும் செறிந்து பருவடிவென, பசை என, படலம் என, உடலை உந்தி பின் தள்ளும் விசையென மாறியது. ஒவ்வொருவரும் அவ்விருளை எதிர்த்து போரிடுபவர்கள்போல கைகளை முன்னால் நீட்டி, முழு விசையால்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12
அவைக்கூடுகை முடிந்ததுமே எந்த முறைமையையும் பேணாமல், எவரிடமும் ஒரு சொல்லாலோ விழியசைவாலோகூட விடைகொள்ளாமல், அவையிலிருந்தே யுதிஷ்டிரனும் இளையோரும் திரௌபதியும் நகர்நீங்கினர். அரண்மனையில் எவரும் துயர்கொள்ளவில்லை. எவரும் வழியனுப்பவில்லை. உடன் செல்லவும் எவருமில்லை. அந்நிலமே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11
அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர்.
யுதிஷ்டிரன்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10
முரசுகளும் கொம்புகளும் முழங்கி ஓய்ந்தன. அவைநடைமுறைகளை அறிவிக்கும்பொருட்டு பட்டுத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்த இளம்நிமித்திகன் அறிவிப்பு மேடையில் ஏறினான். வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றி தலைவணங்கி, உரத்த குரலில் அவன் அஸ்தினபுரியின் குடிவரிசையை கூறினான். “பிறவா...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6
அன்று முன்விடியலில்தான் இளவரசரை பலிநகருக்கு கொண்டுவந்தார்கள். அவரை கொண்டு வருவதற்கென்று விந்தையானதோர் தேர் அமைக்கப்பட்டிருந்தது. அகன்ற தேர்பீடத்தில் வெண்கலத்தாலான தொட்டி ஒன்றில் நீர் நிறைக்கப்பட்டு அதற்குள் மிதந்து கிடந்த பிறிதொரு கலம்மீது அவர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5
உத்கலத்து வணிகர்களுக்கான குடியிருப்பின் பெருங்கூடத்தில் குபேரருக்கு மிருத்திகன் முன்பு அந்த பலிச்சடங்கின்போது நிகழ்ந்தவற்றை சொன்னான். நான் வணிகச் செய்திகளுக்காக அன்றி எங்கும் செல்வதில்லை. பெருவிழவுகளையும் களியாட்டுகளையும் எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறேன். வணிகர்கள் அவற்றை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80
பகுதி ஒன்பது : கலியன்னை
ஆதன் முதற்புலரியிலேயே விழித்துக்கொண்டான். அவன் ஒரு கனவு கண்டான். விழித்தும் அக்கனவிலேயே இருந்தான். மீண்டும் அதிலேயே மூழ்கினான். அதில் அவன் ஒரு செம்மண்சாலையினூடாக நடந்து சிற்றூர் ஒன்றை நோக்கித்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 65
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 15
யுதிஷ்டிரனின் அறைக்குள் மருத்துவர் இருந்தார். முதியவர், அவர்களைக் கண்டதும் எழுந்து நின்றார். சுரேசர் வணங்கி “அரசருடன் உரையாடலாமா?” என்றார். அவர் “உரையாடுவது அவருக்கு நன்று” என்றார். சுரேசர் “அரசே,...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50
பகுதி ஐந்து : விரிசிறகு - 14
யுதிஷ்டிரன் களைப்புடன் இருந்தார். சுரேசரை வரவேற்கக்கூட அவருடைய குரல் எழவில்லை. சுரேசர் அமர்ந்ததும் அவர் சம்வகையிடம் அமரச்சொல்லும்பொருட்டு திரும்பினார். இயல்பாகவே அவர் விழிகள் விலகிக்கொண்டன, அவர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49
பகுதி ஐந்து : விரிசிறகு – 13
பேரரசி திரௌபதியின் தேர் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவளுக்கு அருகே புரவியிலமர்ந்து சம்வகை சென்றாள். பேரரசி தன் மூடுதேரில் இருந்து இறங்கி திறந்த தேரில் ஏறிக்கொண்டாள். அவளை...