குறிச்சொற்கள் ஜெயமோகன்

குறிச்சொல்: ஜெயமோகன்

அஜிதனின் காதல்

அஜிதனுக்குப் பெண்பார்க்கவேண்டும் என என் நண்பர்கள் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். எனக்கு முதலில் ‘அதென்ன பெண்பார்ப்பது?’ என்னும் குழப்பம். அதன்பின் ஒன்று தெரிந்தது, அவனுக்கு நானே பெண் பார்த்தால்தான் உண்டு, அவனே பெண் பார்க்கப்போவதில்லை. ஏனென்றால்...

பேரியாற்றுக் குமிழிகள்

காசியில் உலவுவது முகங்கள் வழியாக இந்திய தேசத்தை அறிவதுதான். பலருக்கு தெரியாத ஒன்றுண்டு, காசிக்கு வருபவர்களில் முக்கால்பங்கினர் தென்னிந்தியர்களே. வட இந்தியர்கள் ராமேஸ்வரம் வருவதுபோல. மனிதர்களுக்கு ராமேஸ்வர் என்ற பெயர் தெற்கே அனேகமாக...

எரிந்தமைதல்

காசியின் மணிகர்ணிகா கட்டத்தில் சிதை அணையலாகாது என்பது தொன்மம். அது காசிவாசியான காலபைரவனுக்கான படையல். ஆகவே இப்பகுதியில் இருநூறு கிலோமீட்டர் தொலைவில் எவர் இறந்தாலும் இங்கே உடலைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஒருநாளில் முந்நூறுக்கும்...

அடியடைவு

காசிக்கு கிளம்பவேண்டும் என தோன்றியதற்கு தனிக் காரணம் ஒன்றுமில்லை, சும்மா தோன்றியது. விசாலாட்சியம்மாவை நினைத்துக் கொண்டேன்.  ஏன் தோன்றியது என்பதற்கு இப்போது காரணங்களை எண்ணிக்கொள்ளலாம், அப்போது ஒன்றும் திட்டமில்லை. ஆனால் சுற்றுலா மனநிலை...

“ஜெட்லாக்”

அன்புள்ள ஜெ, இவ்வளவு தூரம் விமானப் பயணம் மேற்கொள்கிறீர்கள். அடுத்த நாளே நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்கள். உங்களுக்கு ஜெட்லாக்  (விமானப் பயண அசதி) வராதா என ஆச்சரியமாக உள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் குறைந்தபட்சம்...

இன்று சென்னை,நாளை கோழிக்கோடு, பின்னர் செதுக்கோவியங்கள்.

இன்றொருநாள் சென்னை. ஒரே நாளுக்காக சென்னை வருகிறேன். நாகர்கோயிலில் இருந்து கிளம்பி சென்னை வந்து நண்பர் ஷாஜியின் மகள் கீதி சலீலாவின் பதினெட்டாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்கிறேன். கீதி என் நெஞ்சுக்கு அணுக்கமான...

ஆகஸ்ட் 8

இன்று எங்கள் மணநாள். ஆகஸ்ட் 8 எப்போதுமே அருண்மொழிக்கு சிறப்பான ஒரு நாளாக இருந்து வருகிறது. கோயில்களுக்குச் செல்வது வழக்கம். நான் அந்த நாளை பொருட்படுத்தியதில்லை. இணையப்பதிவுகளை வைத்துப் பார்த்தால் அந்நாளில் பெரும்பாலும்...

இரவுப்புயல்

பெரும்புயலடித்த இரவுக்குப் பின் காலை அசாதாரணமான அமைதியுடன் திகழ்கிறது. உடைந்த மரக்கிளைகள், சுவரோரம் ஒண்டிக்குவிந்த சருகுகள், சிதைந்த பறவைக்கூடுகள், சலித்து ஓய்ந்த மரங்கள் எல்லாமே அந்த அமைதியில் மூழ்கி நின்றிருக்கின்றன. அமைதிக்குள் ஒலிக்கும்...

சென்னை விளம்பரம், கோவை புத்தகக் கண்காட்சி, துபாய் இலக்கியவிழா…

இந்த மாதமும் பயணங்களே பாதிநாளை எடுத்துக்கொண்டுவிட்டன. சென்றமாதம் முப்பதாம் தேதி நாகர்கோயிலில் இருந்து கிளம்பி ஈரோடு சென்றேன். ஒன்றுமுதல் மூன்றுவரை குருபூர்ணிமா கொண்டாட்டம். நான்காம் தேதி ஈரோட்டில் குருபூர்ணிமா சந்திப்பு. ஐந்தாம்தேதி தேன்வரந்தை...

இன்னொரு பிறந்தநாள்

  மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள் சென்ற ஆண்டு அறுபது, ஆகவே கொஞ்சம் கொண்டாட்டம் கூடுதலாகவே இருந்தது. இந்த ஆண்டு இதை அப்படியே கடந்துபோகவே எண்ணியிருந்தேன். அதுதான் வழக்கம். ஆகவே எர்ணாகுளம்...