குறிச்சொற்கள் சர்வதன்
குறிச்சொல்: சர்வதன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-46
சதானீகன் திண்ணையில் பாய்ந்தேறியபோது கால் தடுக்கி விழுந்தான். மருத்துவன் “இளவரசே!” என கூவியபடி தொடர்ந்து வர அவன் மூச்சிரைத்தபடி உள்ளே புகுந்து “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவினான். அவனுடைய கூச்சலில் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27
திருஷ்டத்யும்னன் தேரிலேறி நின்று சூழ நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை ஒரு மானுட அசைவுகூட இருக்கவில்லை. பதிந்து உறைந்த கரிய அலைகளைப்போல மானுட உடல்கள் தெரிந்தன. அவை மெல்ல நெளிந்து ததும்பிக்கொண்டிருப்பது போலவும் அசைவிலாது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28
துச்சகனும் துர்முகனும் வீழ்ந்ததை தொலைவிலிருந்தே சுபாகு கண்டான். “தேரை திருப்புக... மூத்தவரிடம் செல்க!” என்று ஆணையிட்டான். அவனுடைய தேர் அணுகிவருந்தோறும் அங்கே நிகழ்ந்திருந்த அழிவு மேலும் துலங்கியபடி வந்தது. பீமனும் மைந்தரும் விசைகொண்டு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27
பீமன் மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் தங்கள் தேர்களில் அவனை தொடர்ந்தனர். படைமுகப்பை நோக்கி அவர்கள் செல்கையிலேயே மிகத் தொலைவில் அர்ஜுனன் மீண்டும் கர்ணனை எதிர்கொண்ட செய்தியை அறிவித்தன முரசுகள்....
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26
குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் கர்ணனின் அணிநிறை முழுதுடலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த சூதர்களில் ஐந்தாமவரான மடங்கர் தன் சிறுபறையை மீட்டி ஓங்கிய குரலில் களநிகழ்வுகளை புனைந்து உரைக்கத் தொடங்கினார். அவருடன் பிற சூதர்களும் இணைக்குரல் எடுத்து...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73
ஓடும் புரவியின்மீது கால் வைத்து தாவி ஏறி விரைந்து திரும்பிய தேர்விளிம்பில் தொற்றி அதன் மகுடத்தின் மேலேறி பாண்டவப் படை முழுமையையும் ஒருகணம் நோக்கி மறுபுறத்தினூடாக இறங்கி தன் புரவிக்கு வந்த திருஷ்டத்யும்னன்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72
சுதசோமன் பீமனை நோக்கி விரைந்துசெல்ல அவனுடன் சர்வதனும் சுருதசேனனும் இருபுறங்களிலுமாக வந்தனர். பீமனை அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தன கர்ணனின் அம்புகள். அவன் தேர் முழுக்க அம்புகள் தைத்து நாணல்கள் என செறிந்து நின்றிருந்தன....
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70
சுழிமையம் நோக்கிச்சென்று இடும்பர்களைத் தாக்கும் தன் போரை துரோணர் மிகக் கூர்மையாக திட்டமிட்டு உகந்த வில்லவர்களை முன்னிறுத்தி வலை ஒருக்கியிருந்தார். முன்னரே தங்கள் தாக்குதலை எதிர்பார்த்து பாண்டவர் சூழ்கை அமைத்திருப்பார்கள் என அவர்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69
ஏகாக்ஷர் சொன்னார்: சர்வதன் கடோத்கஜனின் வலப்புறம் நின்று போரிட்டுக்கொண்டிருந்தான். அன்று மாலை போர் தொடங்கும்போதே அவனிடம் பீமன் எந்நிலையிலும் கடோத்கஜனின் வலப்புற நிலையை ஒழியலாகாது, அவன் அம்புகள் உடனிருக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான்....
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50
ஏகாக்ஷர் சொன்னார்: கடலை அணுகும்தோறும் அகலும் ஆறுபோல் குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் போர் விரிந்து கிளைபிரிந்து பரவிக்கொண்டிருக்கிறது. இன்று அது ஒரு போரல்ல, நூறு முனைகளில் நூறு நூறு விசைகளுடன் நிகழும் ஒரு கொந்தளிப்பு....