குறிச்சொற்கள் கே.ஜி.சங்கரப்பிள்ளை
குறிச்சொல்: கே.ஜி.சங்கரப்பிள்ளை
யாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை
கவிதை பற்றிய கட்டுரை: மொழியாக்கம் அழகிய மணவாளன்
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அப்பா அந்த சைக்கிளில்தான் ஏழாம்மைல் என்ற ஊரிலிருக்கும் ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியராக போனார்....
பலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்
கே.ஜி.சங்கரப்பிள்ளை எனக்கு 1986 முதல் அறிமுகம். சுந்தர ராமசாமி ஆசான் விருது பெற்றதை ஒட்டி ஒரு பாராட்டுக்கூட்டம் திரிச்சூரில் ஏற்பாடாகியது. அதை நடத்தியவர்களில் ஒருவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை.. அன்று அவர் முதன்மையான சமூகக் களப்பணியாளர்....
கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
கே.ஜி.சங்கரப்பிள்ளை அவர்களின் கவிதைகள் உங்கள் தளத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது - கொஞ்சம் அரசியல் பேசி தன்னை தானே கவனிக்கும் ஒவ்வொருவருக்கும் " நெஞ்சோடு கிளத்தல்...
கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதங்கள்
கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
அன்பு ஜெயமோகன்,
கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். பல கவிதைகள் எனக்குப் பிடிபடவில்லை. சிலவற்றை என்னில் இருந்து விலக்க முடியவில்லை. சிதையும் சிதறலும் அப்படியான ஒரு கவிதை,
வீடு காடாவதைச் சுட்டும் சித்திரங்களுக்குப்...
தொப்பி, நாய்,வளைவு – கே.ஜி.சங்கரப்பிள்ளை
தொப்பிகள்
தலைசுற்றி விழும்
கிழட்டு இலை
எத்திசை என்றிலாத
பித்துப் பெருமூச்சு.
பல நோவுகள்
இறுகி அறுந்த கொந்தளிப்பு
சற்றே மிகையாகிவிடாதா
இதைப்போய்
சுழற் காற்று என வணங்குவது?
சுழற்காற்று வீசியநாள்
நாலைந்து ஓடுகள் பறந்தன
சில கிளைகள் உடைந்தன
சில தொப்பிகள் பறந்து சென்றன
பல கீற்று முடி காணமலாயிற்று
அதிகமாகிவிடாதா
இதைப்போய்
புரட்சி என்றெல்லாம்
நீட்டி...
கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
மற்றவன்
அரிவாளிலிருந்து
ஓங்காரம் பிறந்தது
அல்லது
ஓங்காரத்திலிருந்து
அரிவாள் வந்தது
என்று குஞ்சம்பு வாதிட்டான்
அதாவது
கருத்திலிருந்து ஆயுதமும்
ஆயுதத்தில் இருந்து கருத்தும்
செவுளில் ஓர் அறைவிழ
குஞ்சம்பு கீழே விழுந்தான்
ஓங்காரத்திலிருந்தோ
அரிவாளிலிருந்தோ
அடியுண்டாகலாம் என்று ஒருவன் சொன்னான்
ஓங்காரத்தில் இருந்து உண்டாகாது
என்று ஒருவன்
அரிவாளில் இருந்து உண்டாகாது
என்று இன்னொருவன்
அடி என்பது
படைப்பிலிருந்து
பிசாரை விரட்டுதல்
என்று ஒருவன்...
வேதம்,இறந்தோர்,முள்ளம்பன்றி: கே.ஜி.சங்கரப்பிள்ளை
அவேதியர்
அருவருப்புக்கு
வெறுப்பின்மேல்
காதல் வந்தது
சித்திரையிலோ
மார்கழியிலோ
தம்பதிகளானார்கள்
நகரநாற்றத்தில்
ஒரு வாடகை வீட்டில்
இடுங்கலான அறையில்
ஒருவருவருக்கு மற்றவர்
நிழலாகவும்
சிலசமயம்
தீயாகவும்
வசித்தார்கள்.
சுயநலமுனிவர்
குரோதமுனிவர்
லாபமுனிவர்
கிறுக்குமுனிவர்
காமமுனிவர்
பிறந்து பிறந்து
மைந்தர்
புதிய பன்னிரு குலங்களானார்கள்
ரட்சகரும்
ராட்சதரும்
இல்லாத
அன்னமும்
அக்னியும்
விளையாத
கவிதையில்
அவர்கள்
சந்தஸும்
தேவதையும்
இல்லாத
அவேதங்களைப் படைத்தனர்
மேல்நோக்கியோ
கீழே நோக்கியோ
உருட்டவில்லை
பாறையை
அந்த அபத்தப்பாரத்தை
உடைத்து
வீடும் மதிலும் கட்டினர்
சத்தியத்திற்கு சர்வேக்கல்
சிவத்திற்கு விக்ரஹம்
அழகுக்கு தாமரை
சக்திக்கு மந்திர்
தியாகத்திற்கு பலிபீடம்
உறவுக்கு சிறை
வேகத்திற்கு வெட்கிரைண்டர்
மறதிக்கு எதிராக
நினைவின் டூரிசமாக
புத்தன் காந்தி...
வழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை
காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது
உலகுக்கு வந்துசேர்வது கடினம்
உலகை விட்டுச்செல்வதும் கடினம்
போவது என்றால்
என்னை நான் விடுவித்து எடுப்பதா
அல்லது எல்லாம் என்னை விட்டு அகல்வதா?
எல்லாவற்றிலும் ஒன்றுக்கொன்று வளர்வது தொலைவு
எல்லாவற்றிலும் வாழ்வதும் தொலைவு
வெயில் தொடுவதில்லை வந்து
காற்று தழுவுவதில்லை...
சுழல்,எலி,மேடை – கே.ஜி.சங்கரப்பிள்ளை
சுழல்வட்டம்
பூமாலையோ
பொன்மாலையோ
காசுமாலையோ
சிலுவைமாலையோ
தாலியோ
வெள்ளைக்காலரோ
ஸ்டெதெஸ்கோப்போ
ருத்ராக்ஷமோ
சங்கிலியோ
கயிறோ
பாம்போ
நஞ்சுநீலமோ
சுற்றித்தழுவும்
உன் கைகளோ
கழுத்திலிருப்பதே
என் சுழல்வட்டம்
விலாசம்
பெயர்
பாதி தன்னுணர்வில்...
கிழங்கையெல்லாம் தின்று
என் விளைநிலத்தை
வரளச்செய்தது யார்?
விதையறையை துளைத்து
என் அடுத்தபோகத்தை
அழித்தது யார்?
முழவுத்தோலில் ஓட்டையிட்டு
என்னை
முழங்காமலாக்கியது யார்?
அடித்தளம் கூரையென
என் உறுதிகளையெல்லாம்
உள்ளூரக்குடைந்து மட்கவைத்தது
எந்த மரணச்சரம்?
நெற்குவியலை
உமிக்குவியலாக்கியது
எந்த எலி?
எப்படி கண்டுபிடிப்பது?
ஒரே முகம் ஒரே வடிவம்
ஒரே பாணி
ஒரே மாயை
ஒன்றா
பலதா
இதெல்லாம்?
எலிகளிலும்
பிளேகிலும்
புதிர் பரப்புவது
ஒரே...
கே.ஜி.சங்கரப்பிள்ளை – கடிதங்கள்
பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை
கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்-1
அன்புள்ள ஜெ,
கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகள் அபாரமான புத்துணர்ச்சியை அளிக்கின்றன. ஒரு சூழலில் எழும் கவிதைகளுக்கு மொழியிலும் அமைப்பிலும் பார்வையிலும்...