குறிச்சொற்கள் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி
குறிச்சொல்: குவாஜா மொய்னுதீன் சிஷ்டி
குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்
முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார். அவருடைய கஸல் பாடல்களில் இதைக் காணலாம். அவற்றில்...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-7
பெருவளமோ பேரிடரோ அல்ல
நான் விழைவது...
எனக்கென காதலன் விரும்புவதே
நான் விழைவது.
தொடர் துன்பங்களில் எனை இருத்த
அவன் விரும்பினால்
தொடர்ந்து துன்பங்களில் இருப்பதே
நான் விழைவது.
செல்வமும் புகழும் வேண்டுவர் பலர்
மகிழ்வாக துன்பத்தைத் தாங்கும்
வலிமையான மனமே...
நான் விழைவது.
மண்ணில் அதிகாரம், சொர்க்கத்தில் இன்பங்கள்
ஊக்கமுடையோர்...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6
கடவுளை விரும்பினேன்
சொர்க்கமும் இனிமைகளும்
நாடுவதில் இருந்து
நான் விடுபட்டேன்..
இரு உலகின் செல்வங்களும்
விழையவில்லை
காதலனுக்காக
நான் விடுபட்டேன்.
இறைவனின் மேசையில் இருந்து
தெய்வீக விருந்து உண்டேன்..
உலகில் இருத்தும் அன்னமும் நீரும் வேண்டேன்
நான் விடுபட்டேன்.
பிறப்பின் தினம், தெய்வீக அன்பின் செவிலித் தாய்
ஆன்மாவுக்கு அமுது கொடுத்தாள்
இங்கு...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5
உனது காதலின் நெருப்பில்
என் இதயம் தழலாகி வெடிக்கிறது இப்போது..
அமைதியும் மௌனமும் கலைந்து
நான் நொறுங்குகிறேன் இப்போது!
எனது ஒவ்வொரு ரத்த நாளமும்
உனது கரங்களால் காயமானது:
விந்தையானதா அதற்காக
நான் அழுவது இப்போது?
எனது இதயம் துன்பத்தின் வாள் தரும்
வலியை உணர்கிறது
இத்துயர்...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4
என் விழிகள்
எதைப் பார்த்தாலும்
அது நீயே - என்பதை
நான் காண்கிறேன்
அனைத்திலும்
உனைக்காண்பதையே
நான் விழைகிறேன் என
நான் காண்கிறேன்.
உனைக் காணவே இவ்விழிகள்
உன்முகம் என்னிடம் வாராதென்றால் -
ஏதுமில்லை எனக்கென
நான் காண்கிறேன்
கண்டேன் மதுகொணர்பவனின் அழகு
எங்கும் ஒளிர்வதை
கோப்பையில் மதுவில் எங்கெங்கும்
நான் காண்கிறேன்
விழிகளின் புரிதலுக்கு...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3
நீயே என் காதலன்
வேறொருவரையும்
நான் வேண்டேன்...
என் இதயத்தை வென்ற உன்னையன்றி
இன்னொருவரை
நான் வேண்டேன்!
பிரிவின் முள் என் இதயத்தை புண்ணாக்கியது
அந்த இடத்தில் வேறொரு மலரையோ ரோஜாவையோ
நான் வேண்டேன்!
உன் தரிசனத்துக்காக ஈருலகின் செல்வங்களையும் கொடுப்பேன்
நான் உனைக் காண ஏங்குகிறேன்
ஈருலகின்...
குவாஜா ஜி மகாராஜா!
https://youtu.be/Ht53-zDs2sM
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்க பல உறங்கா இரவுகளைக் கடக்கமுடியும். அத்தனை இனிய பாடல்கள் இணையத்தில் நிறைந்துள்ளன. நுஸ்ரத் சாகிபின் ஆற்றல்கொப்பளிப்புக்குப் பின் அஜ்மத் குலாம் ஃபரீத் சாப்ரி...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2
சொற்கள் எனை விலகும்போது
நான் என்ன சொல்ல?
அறிவின் நியதிகளை இதயம் மறக்கிறது
கடலில் இருந்து விலகும்
நீரோடை சலசலக்கிறது
கடல் கலப்பதோ மௌனமாகிறது
நேற்றிரவு ஞானத்தின் சொற்களை
அவனது உதடுகள் உதிர்த்தன
நாவுரைத்து செவியுணரா சொற்கள்..
மறைத்திடும் திரையை
முகத்திலிருந்து விலக்கினான்
அணுக்கமற்றவர்களுக்கு
அம்முகம் மூடப்பட்டேயிருக்கும்
இறைவனின் பாதையில் இருந்து
பக்தன்...