குறிச்சொற்கள் கீதை – கர்மயோகம்

குறிச்சொல்: கீதை – கர்மயோகம்

கர்மயோகம் : (42 – 43)

வேதங்களின் கர்ம காண்டத்தில் ஐம்புலன்களையும் இன்பங்களின் வாயில்களாக கண்டு துதிக்கும் பல வரிகள் உள்ளன. புலன்கள் தேவர்களின் ஊர்திகளாக வேதங்களால் கூறப்படுகின்றன. அந்தப் புலன்களுக்கு நிறைவளிக்கும் இன்பங்களை வேதங்கள் வேண்டுகின்றன. அந்தப் புலன்மைய நோக்கு இங்கே குறிப்பிடப்படுகிறது.

கர்மயோகம் : (35 – 41)

மனிதன் உட்பட எல்லா உயிர்களும் தங்கள் அடிப்படை இயல்புகளின் படித்தானே செல்படுகின்றன. ஏன் அவற்றைத் தடுக்க வேண்டும், தடுக்கத்தான் முடியுமா

கர்மயோகம் : (31 – 34)

பொதுவாக கீதையில் இத்தகைய இணைப்புச் செய்யுட்களில் உள்ள கவித்துவம் காணப்படுவதில்லை. மொழியின் அமைப்பும் வேறுபடுகிறது. இவ்வரிகள் கீதையின் பிற்காலத்தைய செருகல்களாக இருக்கலாம்

கர்மயோகம் : (25 – 30)

மத்வரும் ராமானுஜரும் பார்ப்பது இப்படி வீரியமிழந்த சாங்கியத்தை. சங்கரர் பார்ப்பது உயிர்ப்புடன் விளங்கிய அசலான சாங்கிய தரிசனத்தை

கர்மயோகம் : (20 – 24)

பிரபஞ்சத்தை அறிய முயல்பவன் செயலாற்றியாக வேண்டும். அதேசமயம் செயலில் அவன் மூழ்கினால் அவன் எதையும் அறிய போவதில்லை. செயலின் விளைவான இன்பதுன்பங்களிலேயே சிக்கியிருப்பான்.

கர்மயோகம் : (16 – 19)

தன்னைச்சுற்றியுள்ள ஒவ்வொரு சிறு அசைவிலும் பிரபஞ்சத்தின் மாபெரும் சுழற்சியை ஒருவன் காண்பான் என்றால் அவன் தானும் அதில் ஒரு சிறு பகுதியே என உணர்வான்

கர்மயோகம் : (14 – 15)

அறியப்படக்கூடியதன் ஓர் எல்லயைத் தாண்டும் போது அறிய முடியாமையில் அது வேரூன்றியிருப்பதை நாம் காண்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு அன்றாடச் செயல்பாடும் அந்த எல்லைக்கு அப்பால் நம்மால் அறியவே முடியாத ரகசியத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. மழை என்ற எளிய பெளதிக யதார்த்தம் அதன் உச்சத்தில் பிரபஞ்சத்தை நிலைநாட்டும் மர்மத்தில் இருந்து தொடங்குகிறது'

கர்மயோகம் : (8 – 13)

ஒரு சமூகம் மேலும் மேலும் அன்பை வளர்க்கிறது என்று கொள்வோம். அச்சமூகத்தில் அன்புக்குரிய தேவதையாக கருதப்படும் தெய்வம் வளர்கிறது என்றுதானே பொருள். அன்பு வளர்கிற போது அச்சமூகம் மேலும் அன்பு கொள்கிறது என்றுதானே பொருள்.

கர்மயோகம் : (1 – 7)

சாங்கிய புத்தி உடையவர்களுக்கு ஞானயோகத்தாலும் யோக புத்தி உடையவர்களுக்கு கர்மயோக த்தாலும் விடுதலை என்று இருவகை வழிகளை சொல்லியிருப்பதாக கிருஷ்ணன் கூறுகிறார். நடைமுறை ஞானம் உடையவர்களுக்கு ஞானயோகம் உபதேசிக்கப்படுகிறது. அவர்களின் இயல்பில் சாதாரணமாக இல்லாத ஒன்று அது. அதேபோல யோகபுத்தி உடையவர்களுக்கு செயல் உபதேசிக்கப்படுகிறது. அவர்களின் இயல்பினால் அவர்கள் தயங்கி நிற்கும் இடம் அது.

கர்மயோகம் : செயலெனும் விடுதலை

வழக்கமான கீதை உரைகளைப்போல எளிமையாக ஒன்றைச் சொல்ல இந்த உரை முயல்வதில்லை என்பதை வாசகர் கவனிக்கலாம். நம்முடைய மனம் 'ஆகமொத்தம் கீதை சொல்வது இதைத்தான்' என்ற வகையான உரைகளுக்கு மிகவும் பழகிவிட்டிருக்கிறது. அத்தகைய கூற்றுகளை அனிச்சையாக அது நாடுகிறது