குறிச்சொற்கள் கல்பற்றா நாராயணன்
குறிச்சொல்: கல்பற்றா நாராயணன்
தொடுதிரையின் மேல் விரல்கள்
தொடுதிரை நூல் வாங்க
(கல்பற்றா நாராயணனின் கவிதைகளின் தொகுதியான தொடுதிரைக்கு எழுதிய பின்னுரை)
இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தில் ஒரு கவிதைக்கூடலில் கல்பற்றா நாராயணனின் கவிதைகளை வாசித்து விவாதித்தபோது அன்று கவிதைகள் எழுதத்தொடங்கியிருந்த ஒரு பெண் கவிஞர்...
தொடுதிரை- கல்பற்றா நாராயணன்
காய்த்துப்போன விரலிருந்தும்
எத்தனை அழுத்தியபோதும்
செயல்படவில்லை.
இது தொடுதிரை அப்பா
மெல்ல தொட்டாலே போதும்
அழுத்தவே வேண்டியதில்லை
சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை
இதோ இப்படி
அவன் விரல்
நீரின்மேல் ஏசு போல
நடந்தது
அவன் விரும்பியபடி
செயல்பட்டன எல்லாம்
உலகம்
எனக்கு வசப்படாமலிருந்தது
இதனால்தானா?
நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா?
என்னளவு அறிவோ ஆற்றலோ இல்லாதவர்கள்
நான் விரும்பியவற்றை
விரும்புவதைக் கண்டு
தேவையில்லாமல் ஆற்றாமை...
கல்பற்றா நாராயணன் உரை – கடிதம்
அன்புள்ள ஜெ,
ஜெ60 மனதுக்கு நிறைவான ஒரு நாள். காலையில் பச்சைநாயகி சன்னதியில் வைத்து அந்த பெண் திருமுறையை பாடியபோதே அந்த நாள் முழுதும் நிறைந்துவிட்டது. அகத்திற்குள் வெறெதுவும் செல்லவில்லை. அன்று முழுதும் மிதந்துகொண்டே...
கல்பற்றா உரை, மேடையில் உருக்கொண்ட அற்புதம்
https://youtu.be/eu_CW-aLyHc
புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை தமிழில்)
அன்பின் ஜெ,
எனக்கெல்லாம் மலையாளிகள் சாதரணமாக பேசுவதே ஒரு performance போல இருக்கும். குரலின் ஏற்ற இரக்கங்கள், எதையும் ஆத்மார்த்தமாக சொல்வதான பாவம் எல்லாம் சேர்ந்து...
நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?
நெடுஞ்சாலைப் புத்தர்
நேற்று நான்
நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும்
புத்தனைக்கண்டேன்
சாயங்காலப் பரபரப்பில்
கடக்க முடியாமல்
இப்பக்கம்
வெகுநேரமாக நின்றிருந்தேன்
ஐம்பதோ
அறுபதோ
எழுபதோ
வருடம் நீளமுள்ள வாழ்வில்
எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம்
நாம் இப்படி கடக்க முடியாமல்
காத்து நிற்கிறோம்
என்று எண்ணியபடி ...
அப்போது ஒருவன்
சற்றும் தயங்காமல்
மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக்...
நிம்மதி
அம்மா இறந்தபோது
ஆசுவாசமாயிற்று
இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்
எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்
இனி என்னால்
காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்
முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை
இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து
தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்
ஓடிவரும் அலறல்
என்னை திடுக்கிடச்செய்யாது
இனி...
இ.எம்.எஸ்ஸும் தமிழும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு...
அம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
கோவையில் பேசும்போது கல்பற்றா சொன்னார், "கவிதையில் ஒரு wit இருக்கவேண்டும்"
இதைக் கேட்ட பிறகு வாசிப்பவற்றில் எல்லாம் 'wit' ஐ தேடிக்கொண்டிருக்கிறேன்.
அவரது 'நிம்மதி'யை வாசித்த போது, படைப்பில் உள்ள 'wit' ஐ ரசித்துக்...
சுமித்ரா
கல்பற்றா நாராயணனிடமும் டி.பி.ராஜீவனிடமும் எட்டுவருடம் முன்பு ஊட்டி கவியரங்கில் சொன்னேன், நவீன காலகட்டத்தில் கவிஞன் எழுதவேண்டியது நாவல்தான் என. கவித்துவம் முழுமையாகவெளிப்படுவதற்குரிய கலைவடிவம் நாவலே. கட்டற்றது, மொழியின் எல்லா மடிப்புகளுக்கும் இடமளிப்பது.
டிபி.ராஜீவன் சிலவருடங்கள்...
கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2
தற்செயல்
========
வீடு முழுக்க ஆட்கள் உள்ள
அந்தப் பண்டிகைநாளில்
ஒர் அறையிலிருந்து
மற்றொரு அறைக்கும் ஓடும்வழியில்
நொடிநேரம் அவள்முன் வந்தீர்கள்.
எங்கிருந்தோ வந்த ஒரு முத்தத்தை
அவளுக்கு அளித்தீர்கள்.
பிறகு
எல்லா பரபரப்பும் முடிந்தபின்னர்
படுக்கையில் குப்புறவிழுந்து கண்ணீர்வடிக்கிறாள்.
திடுமென வந்துசேரும் இனிமையை எண்ணி.
எதன்மீதும் தனக்கு ஒரு அதிகாரமும்...