குறிச்சொற்கள் கர்மிகன்
குறிச்சொல்: கர்மிகன்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
பிரம்மகபாலத்தின் மலைக்குகைக்குள் மழைக்காற்று தழல்கெட்டு கனல்கொண்டிருந்த எரிகுளத்தில் இருந்து பொறிஎழ வீசியது. செவ்வொளியில் குகைச்சுவர்கள் தசைப்படலமென சுருங்கி விரிந்து அதிர்ந்தன. செங்கனல்துளியை கைபொத்திப் பற்றி விரல் இடுக்குகளில் குருதியென அனல்வழிய வாயில் சேர்த்து...