குறிச்சொற்கள் கடோத்கஜன்
குறிச்சொல்: கடோத்கஜன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35
பீமன் விசையுடன் நடந்து பாய்ந்து புரவியிலேறி அதை நாற்குளம்போசையுடன் விரையச்செய்தான். அவன் உளமறிந்ததுபோல் புரவி புதர்கள் மண்டிய பாதையில் தாவிச் சென்றது. சிறு ஓடைகளை தாவிக் கடந்தது. அதன் குளம்புகளில் பட்டு கூழாங்கற்கள்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74
பீமன் இடும்பவனத்தின் அடர்காட்டுக்குள் மரக்கிளைகளில் இலைச்செறிவுக்குள் கொடிகளை இணைத்துக்கட்டிய படுக்கையில் துயின்றுகொண்டிருந்தான். இடும்பர்களின் அந்தப் படுக்கை முறையை அவன் அங்கு வந்த பின்னர் கற்றுக்கொண்டிருந்தான். ஓர் எடைமிக்க மானுடன் கொடிகளில் துயில்வதற்கு எட்டு...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73
ஓடும் புரவியின்மீது கால் வைத்து தாவி ஏறி விரைந்து திரும்பிய தேர்விளிம்பில் தொற்றி அதன் மகுடத்தின் மேலேறி பாண்டவப் படை முழுமையையும் ஒருகணம் நோக்கி மறுபுறத்தினூடாக இறங்கி தன் புரவிக்கு வந்த திருஷ்டத்யும்னன்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72
சுதசோமன் பீமனை நோக்கி விரைந்துசெல்ல அவனுடன் சர்வதனும் சுருதசேனனும் இருபுறங்களிலுமாக வந்தனர். பீமனை அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தன கர்ணனின் அம்புகள். அவன் தேர் முழுக்க அம்புகள் தைத்து நாணல்கள் என செறிந்து நின்றிருந்தன....
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71
துச்சாதனன் படைகளின் நடுவிலூடாக புரவியில் விரைந்துசென்றான். அவன் விழிகள் இருபக்கமும் துழாவி பதறிக்கொண்டிருந்தன. எதிரில் வந்த படைத்தலைவன் காஞ்சனனிடம் “மைந்தர்கள் எங்கே?” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70
சுழிமையம் நோக்கிச்சென்று இடும்பர்களைத் தாக்கும் தன் போரை துரோணர் மிகக் கூர்மையாக திட்டமிட்டு உகந்த வில்லவர்களை முன்னிறுத்தி வலை ஒருக்கியிருந்தார். முன்னரே தங்கள் தாக்குதலை எதிர்பார்த்து பாண்டவர் சூழ்கை அமைத்திருப்பார்கள் என அவர்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69
ஏகாக்ஷர் சொன்னார்: சர்வதன் கடோத்கஜனின் வலப்புறம் நின்று போரிட்டுக்கொண்டிருந்தான். அன்று மாலை போர் தொடங்கும்போதே அவனிடம் பீமன் எந்நிலையிலும் கடோத்கஜனின் வலப்புற நிலையை ஒழியலாகாது, அவன் அம்புகள் உடனிருக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான்....
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63
பார்பாரிகன் சொன்னான்: அலாயுதன் இடும்பர்கள் விண்ணிலிருந்து விழுந்தெழுந்து தாக்குவதை கண்டான். அவனுடைய படைவீரர்கள் ஆணையிடாமலேயே தங்கள் நீண்ட வேல்களை மேல்நோக்கி கூர் நின்றிருக்க பிடித்து கீழே விழும் இடும்பர்களுக்கு நேராகக் காட்டி அவர்களை...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62
அரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57
சஞ்யசனின் கைகள் ஆடிக்குமிழிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் பிரித்தும் காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தன. அவன் கண்விழிகள் அசைந்த விரைவிலேயே அவை நிகழ்ந்தன. அவன் உள்ளத்தின் விசையை கண்களும் அடைந்திருந்தன. எனவே எண்ணியதை அவன்...