குறிச்சொற்கள் எள்
குறிச்சொல்: எள்
புறப்பாடு II – 2, எள்
மூடிய அறைக்குள் மண்ணெண்ணை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பழையபாணி விளக்கு. பித்தளையாலானது. ஒயின்கோப்பை போன்ற ஒற்றைக் காலுக்கு மேலே சங்குபோன்ற எண்ணைக்குடுவை. மேலே ஒரு திரி. அதில் கருநிறக்கூந்தல் விரித்து நின்றாடும் செந்நிற யட்சிபோல...