குறிச்சொற்கள் இளநாகன்
குறிச்சொல்: இளநாகன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-1
மதுரையில் பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியின் அவைக்கு வடபுலத்தில் இருந்து வந்த பாணன் கன்னங்கரிய உடலும், வெண்ணிறமான பற்களும் வெள்ளை விழிகளும் கொண்டிருந்தான். தன் பெயர் சீர்ஷன் என்று அவன் சொன்னான். அவனை அவைக்காவலர்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71
நிறைபொலி
சூதரே, மாகதரே, பாடுங்கள்! தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம்போல வினா அவர்களை இட்டுச்செல்கிறது. சரிவுகளில் உருட்டி அருவிகளில் வீழ்த்தி சமவெளிகளில் விரித்து கொண்டுசென்று சேர்க்கிறது....
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67
பகுதி பத்து : மண்நகரம்
இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வசந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61
பகுதி ஒன்பது : பொன்னகரம்
ஹிரண்மயத்தின் மேல் மழை பெய்து ஓய்ந்து துளிசொட்டும் தாளம் பரவியிருந்தது. செந்நிறவெள்ளம் காற்றில் பறக்கும் பட்டுச்சேலைபோல நெளிந்து சுழித்துக்கொண்டிருந்த ஹிரண்யவாகா ஆற்றின் கரையோரமாக ஏழுநாட்கள் நடந்து வந்து ஓர்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60
பகுதி ஒன்பது : பொன்னகரம்
ஹிரண்யவாகா நதியின் கரையில் இருந்த ஹிரண்மயம் என்ற ஊருக்கு இளநாகன் பூரணருடன் சென்று கொண்டிருந்தான். ரௌம்யர் வழியிலேயே பிரிந்து சென்றுவிட அவனுடன் பூரணர் மட்டுமே இருந்தார். ஆசுர வனதேசத்தின்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59
பகுதி ஒன்பது : பொன்னகரம்
நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும் பல்லாயிரம் கோடிப் புழுக்களே, இப்புவியின் வலியனைத்தையும் அறிபவர்கள் நீங்கள். வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவர்கள். மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே நெளிந்து நெளிந்து...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49
பகுதி எட்டு : கதிரெழுநகர்
கலிங்கக் கடலோரமாக இருந்த ஆலயநகரமான அர்க்கபுரிக்கு அருணரும் இளநாகனும் பின்னிரவில் வந்துசேர்ந்தனர். அர்க்கபுரிக்குச்சென்ற பயணிகளுடன் நடந்து கடற்காற்று சுழன்று வீசிக்கொண்டிருந்த சிறுநகரின் இருண்ட தெருக்கள் வழியாக நடந்தனர். கருங்கற்களால்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48
பகுதி ஏழு : கலிங்கபுரி
"கலிங்கர்களுக்கு முன் இந்நகருக்கு கூர்மபுரி என்று பெயர்" என்றார் சூதரான அருணர். "கூர்மகுலத்து மன்னர்கள் நூற்றுவர் இந்நகரை ஆண்டிருப்பதாக இங்குள்ள காச்சபாமர்கள் என்னும் பழங்குடியினர் சொல்கிறார்கள். அவர்களின் மொழியில்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 36
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
கோதையின் கரையிலிருந்த ராஜமகேந்திரபுரியின் பெருந்துறை முனையில் உதர்க்கர் என்னும் சூதருடன் நின்று கடலில் இருந்து பீதர்களின் பெருங்கலமொன்று எழுந்து வருவதைப் பார்த்து நின்றான் இளநாகன். கோதாவரி கடல்முகம்கொண்ட...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 25
பகுதி ஐந்து : நெற்குவைநகர்
தான்யகடகத்தின் அறச்சாலைக்கு இளநாகனும் கீகடரும் விஸ்வகரும் அஸ்வரும் இரவில் வந்துசேர்ந்தனர். பகல்முழுக்க நகரத்தில் அலைந்து மக்கள் கூடுமிடங்களில் பாடிப்பெற்ற நாணயங்களுக்கு உடனடியாகக் குடித்து உண்டு கண்சோர்ந்து ஒரு நெல்கொட்டகையில்...