குறிச்சொற்கள் இயேசு கிறிஸ்து
குறிச்சொல்: இயேசு கிறிஸ்து
தளிர்
பாலையின் பொருளில்லா வெண்மையில்
மணல் அலைகளின் வெறுமையின்மேல்
காற்றின் பசியோலத்தின் கீழ்
தன் நடையோசை ஒன்றே துணையென
செல்பவனின் கால்கள் எப்படியிருக்கும்?
இழைக்கப்படாத மரம்போல் செதில்படிந்து
வெடித்து
காய்த்து.
எனில்
வருபவனின் கால்களும் அவ்வண்ணமே இருக்கும்.
கால்களாலன்றி அவன் சென்ற தொலைவை
எவ்வண்ணம் அறிய முடியும்?
கால்களாலன்றி அவன் வந்த...
சொல்
ஆழ்ந்த
தனித்த
துயருற்ற
ஒன்று
பிரார்த்தனை செய்யவேண்டியதில்லை.
அதன் இருப்பே ஒரு பிரார்த்தனை
அதன் சலிப்பும் நம்பிக்கையும்
துயிலும் விழிப்பும் மன்றாட்டுக்கள்
ஒரு சொல்லை
மிகமிகக் கவனமாக நகர்த்துபவன்
ஒரு சொல் நகர்ந்த இடைவெளியை
திடுக்கிடலுடன் கண்டுகொள்பவன்
வேறெந்த தோத்திரத்தையும் தேடுவதில்லை.
நாவரைக்கும் வந்தமையாத
சொற்கள் ஒவ்வொன்றும் சிறுபுயல்கள்.
அழியாதவற்றை கண்டுகொண்டபின்
அவன் எழும்போது
முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவனாக...
இரு தனிமைகள்
அத்தனை தீமையின் நடுவிலும்
தெய்வமைந்தன் என்றிருப்பதன் தனிமையா
அத்தனை தீமையும் என்னதே என்று
சொல்லவைத்தது உன்னை?
அனைத்தையும் சுமந்திருக்கையில் உணர்ந்திருப்பாய்
மானுடனின் மெய் என்னவென்று.
என் ஆசிரியனே
மானுடனில் ஒருவனாக நின்றே
என்னை ஏன் கைவிட்டீர் என்று கேட்டாய்போலும்.
மலையுச்சித் தனிமையில் பெருகிய சொற்கள்
இன்னொரு மலையுச்சித்...
இவ்விரவில் மௌனமாக உருகு…
தனித்திருப்பது அத்தனை கடினமா என்ன?
மன்னிப்பது அத்தனை பாரமா என்ன?
எளிமை அத்தனை சங்கடமானதா?
எல்லோருக்கும் என்ற சொல் ஒரு கூரிய வாளா?
தெரியவில்லை.
நீ அறிந்திருக்கலாம்
முதல்முறை மேரியின் மடியில்.
இன்னொருமுறை மக்தலேனாவின் கண்ணீரில்.
மீண்டுமொருமுறை சிலுவையில்.
கடைசியாக, உயிர்த்தெழுகையில்
நீ சொன்ன சொற்களில் அவை...
கடவுளின் மைந்தன்
ஆயிரம் பல்லாயிரம் கைகள்
கூடி ஆர்ப்பரித்து பாடி பரவசம் கொண்டு
தேடித்துழாவும் வெளிக்கு அப்பால்
மெல்லிய வருத்தப்புன்னகையுடன்
நீ நின்றிருப்பதைக் காண்கிறேன்.
தனித்து, பசித்து, விழித்திருக்கும் ஒருவன்
தனக்கு தான் மட்டுமே என
தன் நெஞ்சில் கை வைக்கும்போது
அந்தக்கை உன் பாதங்களில் படுவதையும்
இனிய சிரிப்புடன்
அவன்...
தொலைவு
சொல்வதற்கும்
சொல்லவிழைவதற்கும்
நடுவிலிருக்கும் அந்த பெரும் பாலையை
இப்போதென
உணர்ந்திருந்தால்
என்றோ நானும் மன்னித்திருப்பேன்
இங்குளோரையெல்லாம்
விழைந்த பாதைகளிலெல்லாம்
நடக்கும் துணிவிருந்திருந்தால்
பெருஞ்சுமையுடனேனும்
வந்தடைந்திருப்பேன்
உன் மாளிகை முற்றத்தை
எடுத்த அனைத்தையும்
திரும்ப வைத்துவிட்டால்
எத்தனை எளியது நடப்பதென்று
தெரிந்துகொள்ள மிகவும் பிந்திவிடுகிறது
ஆயினும்
அனைத்து இயலாமைகளையும் சொல்லி
ஒரு மௌனவிழிநீர்த்துளியால்
நெடுந்தொலைவுக்கு நெருங்கிவிடமுடிகிறது