குறிச்சொற்கள் ஆயுஸ்
குறிச்சொல்: ஆயுஸ்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33
33. பெருந்துயர் சாளரங்கள்
எட்டாண்டுகாலம் ஆயுஸ் அவ்வரண்மனையின் சாளரங்களினூடாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மைந்தன் மீண்டு வரும் பாதையை பார்க்கிறான் என்று முதலில் அரண்மனையில் பேசிக்கொண்டனர். பின்னர் வருங்காலம் அவன் கண்களில் தெரிகிறது போலும் என்றனர்....
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–32
32. விண்பறந்து வீழ்தல்
இந்துமதி கருவுற்ற நாள் முதலே அவள் இறப்பாள் என்பது ஆயுஸின் உள்ளத்தின் ஆழத்தில் தெரிந்தது. அவள் அஞ்சியும் பதைத்தும் தன்னுள் நிகழ்வதை சொல்ல முயல்வதையெல்லாம் உவகையுடனும் எதிர்பார்ப்புடனும் பேசி அதை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–31
31. நற்கலம்
மைந்தன் பிறந்தபோது ஆயுஸ் அதுவரை அவனிலிருந்த உளநிகரை முற்றிலுமாக இழந்தான். தந்தையிடம் இரந்து பெற்ற தீச்சொல் எப்போதும் நினைவில் இருந்தமையால் ஒருபோதும் அவன் நிலைமறந்து உவகை கொண்டதில்லை. களியாட்டுகளில் கலந்துகொண்டதில்லை. பல்லாயிரம்பேர்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
29. பிறிதொருமலர்
வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஊர்வசி ஆலயம் அமைந்த சோலைவிட்டு கிளம்பும்போது பீமன் மூச்சைக்குவித்து இழுத்து தொலைவில் எழுந்த மெல்லிய நறுமணத்தை முகர்ந்து அத்திசை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–27
27. வீடுகோள் செலவு
கீற்றுநிலா முகில்களுக்குள் மறைந்தும் விளிம்புகாட்டியும் நகரை ஆக்கி அழித்துக்கொண்டிருந்த பின்னிரவில் முரசோ கொம்போ ஒலிக்காமல் ஓரிரு பந்தங்கள் மட்டுமே எரிந்த சிறைமுற்றத்தில் ஐம்பது வில்வீரர்கள்கொண்ட படை காத்திருந்தது. உள்ளிருந்து எழுவர்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–26
26. வாளெழுகை
மூதரசரின் எரியூட்டல் முடிந்த மறுநாளே மூதரசி அரண்மனையிலிருந்து கிளம்பினாள். எரியூட்டலுக்கு கால்நிலையா கள்மயக்கில் வந்த புரூரவஸ் சிதையில் எரி எழுந்ததுமே “களைப்பாக உள்ளது. ஏதேனும் தேவை என்றால் சொல்லுங்கள்” என்றபின் கிளம்பிச்சென்றான்....
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–23
23. இருள்மீட்சி
பன்னிரு நாட்கள் துயிலிலேயே இருந்தான் புரூரவஸ். மென்பட்டுச் சேக்கையில் கருக்குழவியென உடல் சுருட்டி, முட்டுகள் மேல் தலை வைத்து, இரு கைகளையும் மடித்து கழுத்தில் சேர்த்து படுத்திருந்தான். மருத்துவர்கள் அவனை நோக்கியபின்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–22
22. எரிந்துமீள்தல்
ஒவ்வொருநாளும் அரசனின் உடல் சுருங்கி நெற்றாகி, உலர்ந்த புழுபோலாகி, வெண்பட்டுப்படுக்கையில் வழிந்த கறையென்றாகி கிடந்தது. அறையெங்கும் மட்கும் தசையின் கெடுமணமே நிறைந்திருந்தது. அதை மறைக்க குந்திரிக்கப் புகை எழுப்பிக்கொண்டிருந்தனர். தரையை மும்முறை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21
21. விழைவெரிந்தழிதல்
ஏழாண்டுகள் சியாமையுடன் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளும் புரூரவஸின் உடல் பொலிவுகொண்டு வந்தது. அவன் சிரிப்பில், சொல்லில், நோக்கில், அமர்வில் வென்றவன் எனும் பீடு தெரிந்தது. அவன் இருக்குமிடத்தில் கண்ணுக்குத் தெரியா கந்தர்வர்கள்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20
20. விண்வாழ் நஞ்சு
குருநகரி மீண்ட விஸ்வவசு தன் பொந்துக்குள் பிற கந்தர்வர் எழுவரையும் கூட்டி அமர்ந்து சொல்சூழ்ந்தான். “நாம் இங்கு செய்வதற்கு ஏதுமில்லை. ஒருவர் முப்பொழுதும் அவளை தொடர்க! ஆறு மைந்தரை அறுவர்...