குறிச்சொற்கள் அஸ்வத்தாமன்
குறிச்சொல்: அஸ்வத்தாமன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39
பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 9
எப்போதுமே தனிமையை ஓர் அழுத்தமாகவே யுயுத்ஸு உணர்ந்து வந்தான். ஆனால் ஒன்று நிகழ்வதற்கு முன் அமையும் தனிமையை அவன் வியப்புடன் மீளமீள எண்ணிக்கொள்வதுண்டு. அப்போது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38
பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 8
குடிலை அடைந்து மரவுரி விரிக்கப்பட்ட மூங்கில் மஞ்சங்களில் அமர்வது வரை இளைய யாதவரும் அர்ஜுனனும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. கால் தளர்ந்து பரசுராமரின் முற்றத்தில் அமர்ந்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37
பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 7
அன்று பகல் முழுக்க தேரில் அவர்கள் சென்றுகொண்டே இருந்தார்கள். அந்த திசையை ஏன் இளைய யாதவர் தெரிவுசெய்தார் என அவன் வியந்தான். கங்கைக்கு இணையாகவே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36
பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 6
தேர் கிளம்பியதுமே யுயுத்ஸு ஒன்றை உணர்ந்தான். அது போருக்குரிய தேரல்ல. சீரான நெடும்பாதையில் விரைந்து செல்லக்கூடியதும் அல்ல. இரட்டைப்புரவி கட்டப்பட்டது. மேடுபள்ளமான சிறிய தொலைவுக்கு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57
அஸ்தினபுரியின் மேற்கே அமைந்திருந்த குறுங்காட்டில் விழிகளை முற்றிலும் இல்லாமலாக்கிய கூரிருளுக்குள் அஸ்வத்தாமன் முன்னால் செல்ல கிருபரும் கிருதவர்மனும் தொடர்ந்து சென்றனர். அஸ்வத்தாமன் செவிகளையும் தோலையும் விழிகளாக ஆக்கிக்கொண்டான். அவன் செல்லும் வழியை மட்டுமே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47
தொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-44
துரியோதனனின் சிதையில் எரிந்த தீ தன் வெம்மையை தானே பெருக்கிக்கொண்டது. தழல்கள் ஒன்றன்மேல் ஒன்றென ஏறி வான் நோக்கித் தாவின. தீயின் இதழ்களுக்குள் துரியோதனனின் உடலை நோக்க விழைபவன்போல அஸ்வத்தாமன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான்....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43
குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டைச் சென்றடைந்தபோது அவர்கள் முற்றாகவே சொல்லடங்கி வெறும் காலடியோசைத் தொடராக இருளுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தார்கள். தெற்குக்காடு சீவிடுகளின் ஒலிகூட இன்றி அமைதியாக இருட்குவைகளின் பரப்பாக சூழ்ந்திருந்தது. கிருபர் தொண்டையைச் செருமி, குரல்கொண்டு “அங்கே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42
காலகத்தை அணுகுந்தோறும் கிருபர் நடைதளர்ந்தார். அஸ்வத்தாமன் வேறெங்கோ உளம் அமைய நடந்துகொண்டிருக்க கிருதவர்மன் நின்று திரும்பி நோக்கி மூச்சிரைக்க “விசைகொள்க, ஆசிரியரே. இருட்டி வருகிறது. அங்கே ஒளியில்லையென்றால் சென்றும் பயனில்லை” என்றான். “இந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41
நேர் எதிரில் வேடன் நின்றிருந்தான். அஸ்வத்தாமன் அவனைப் பார்த்துக்கொண்டு ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தான். அவன் அங்கே எங்கிருந்து வந்தான் என்று அஸ்வத்தாமன் வியந்தான். காற்றில் இருந்து பனித்துளியென முழுத்து எழுந்து வந்தவன் போலிருந்தான். அல்லது...