குறிச்சொற்கள் அர்ஜுனன்
குறிச்சொல்: அர்ஜுனன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13
குகையின் இருள் மேலும் செறிந்து பருவடிவென, பசை என, படலம் என, உடலை உந்தி பின் தள்ளும் விசையென மாறியது. ஒவ்வொருவரும் அவ்விருளை எதிர்த்து போரிடுபவர்கள்போல கைகளை முன்னால் நீட்டி, முழு விசையால்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12
அவைக்கூடுகை முடிந்ததுமே எந்த முறைமையையும் பேணாமல், எவரிடமும் ஒரு சொல்லாலோ விழியசைவாலோகூட விடைகொள்ளாமல், அவையிலிருந்தே யுதிஷ்டிரனும் இளையோரும் திரௌபதியும் நகர்நீங்கினர். அரண்மனையில் எவரும் துயர்கொள்ளவில்லை. எவரும் வழியனுப்பவில்லை. உடன் செல்லவும் எவருமில்லை. அந்நிலமே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11
அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர்.
யுதிஷ்டிரன்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9
அஸ்தினபுரியின் அவை கூடத்தொடங்கியிருப்பதை முரசுகள் அறிவித்தன. பெருவணிகர்கள் சிறு குழுவாக அரசமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி, காவலருக்கு தங்கள் முத்திரைக் கணையாழிகளைக் காட்டி ஒப்புதல் பெற்று, அவைக்கு சென்றனர். வெவ்வேறு வணிகர்குடிகளும் வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8
வியாசரின் மாணவர் ஓலையிலிருந்து படித்துச் சென்றார். “எப்போதும் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்துகொண்டிருந்த பிரதீபன் என்னும் அரசன் கங்கையின் பிறப்பிடத்திற்குச் சென்று அங்கே நெடுங்காலம் தவமியற்றிக்கொண்டிருந்தான். அந்த அரசமுனிவன் வேதம் உரைத்துக்கொண்டிருக்கையில் அழகிய முகமும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7
பலி நிகழ்வுகளுக்குப் பின்னர் கங்கையின் பெருமணல் பரப்பில் அனைவரும் உண்டாட்டுக்கு அமர்ந்தனர். நீத்தோரை வழுத்தி நிறையுணவு உண்டு செல்வது என்பது தொல்மரபு. உண்டாட்டுக்குரிய ஓசைகளோ முகமன்களோ இல்லாமல் அனைவரும் அமைதியாக தங்களுக்குரிய இடங்களில்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–87
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 6
மலையன் சொன்னான். அரசே, இளைய யாதவரின் விண்புகுதல் செய்தியை புறவுலகுக்குச் சொல்லும் கடமையை ஊழ் எனக்கு அளித்தது. சான்றாக அவருடைய காதில் கிடந்த குண்டலங்களையும்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–85
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 4
மலைச்சாரலில் நான் சந்தித்த அந்த முதிய சூதரின் பெயர் சௌம்யர். வெள்ளிமலை அடுக்குகள் வான் தொட எழுந்த வடக்குதிசைகொண்ட நிலத்தை சார்ந்தவர். கோமதி ஆறு...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–83
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 2
அர்ஜுனன் சிற்றோடைக்கரையில் நீர்மருத மரத்தின் வேரில் உடல் சாய்த்து கால் நீட்டி படுத்திருந்தான். அவன் கால்களைத் தொட்டு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதில் மிதந்து வந்த...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–82
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 1
மணிப்பூரக நாட்டிலிருந்து நள்ளிரவில் எவரிடமும் கூறாமல் கிளம்பி, மூங்கில் செறிந்த சாலையினூடாக காட்டுக்குள் புகுந்து, கிழக்கு ஒன்றையே இலக்கெனக் கொண்டு பன்னிரண்டு இரவுகள் பகல்கள்...