குறிச்சொற்கள் அமெரிக்க பயணம் 2023

குறிச்சொல்: அமெரிக்க பயணம் 2023

மனிதவலை

பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் ஒரு மூத்த தமிழ் எழுத்தாளர் கேட்டார். “பயணங்களால் எழுத்தாளனுக்கு என்ன பயன்? அவன் எழுதவேண்டியது அவனுக்கு நன்றாகத் தெரிந்த இடங்களையும் மனிதர்களையும்தானே? பயணங்களில் மேலோட்டமாகப் பார்த்துச்செல்லும் நிலமும்,...

ஒளிச்சிற்பங்கள்

படிகங்கள் மீது எனக்கிருக்கும் பிரியமென்பது இளம்பருவத்திலேயே தொடங்கியது. அமெரிக்காவில் நான் பல படிகக்கண்காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் கண்மயங்கி, நினைவழிந்து அலையச்செய்யும் அனுபவங்கள். படிகங்களில் விலைமதிப்பு மிக்கது வைரம் அருமணிகள் பதினெட்டு என நம்...

கிறுக்கோவியங்கள்

என் முதல் வெளிநாட்டுப் பயணத்தின்போது, 2001ல் , டொரெண்டோவில் முதல்முறையாக சுவர்க்கிறுக்கல் பண்பாட்டின் முதல் தடையத்தை பார்த்தேன். சுவரில் இருந்த அந்தக் கிறுக்கல்கள் ஓவியமா எழுத்துக்களா என எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடன்...

வாய்நோக்கியல்

பொதுவாக எல்லா போர்டுகளையும் வாசித்துவிடுவது என் வழக்கம். மின்னல்வேகக் காரிலேயே பெயர்ப்பலகைகளை வாசிப்பேன். விளம்பரங்களை கவனிப்பேன். எழுத்துப்பிழைகளும் வேடிக்கைகளும் கண்ணில் இருந்து தவறுவதில்லை. பயணங்களில் அவற்றை பெரும்பாலும் நான்தான் பிறருக்குச் சுட்டிக்காட்டுவேன். தேவையென்றால்...

உலகின் மையத்தில்…

நியூயார்க் நகரின் டைம் ஸ்குயர் என்னும் உலகமையங்களில் ஒன்றில் நின்றிருந்தோம். முகங்களின் கொப்பளிப்பைப் பார்க்கவே அங்கே செல்வதுண்டு. அங்கே வெள்ளை முகங்களை விட சீன முகங்களே மிகுதி. ஒவ்வொரு முறையும் அங்கே செல்லும்...

ஓர் அமெரிக்கக் கனவு

https://youtu.be/U3TXbSwrW1s அமெரிக்கா வந்து இருபத்தைந்து நாட்களாகின்றன. சென்ற ஆண்டும் ஒரு மாதம் இங்கிருந்தேன். மொத்தமாக அமெரிக்காவில் நான் இருந்த நாட்கள் இப்போதைய கணக்கின்படி நான்கு மாதங்களுக்கு மேல் வரும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் பெரும்பாலான...

டொரெண்டோ சந்திப்பு

டொரெண்டோவில் 21 அக்டோபர் 2023 அன்று நிகழும் உரை.  ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். முன்பதிவு தேவையில்லை. இப்போது வான்கூவரில் இருக்கிறேன். இங்கிருந்து டொரெண்டோ சென்று இரண்டுநாட்கள் தங்கியிருப்பேன்.

புதியவானம்

https://youtu.be/tY7wmv-UDGQ அமெரிக்காவில் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கென சென்றுகொண்டே இருக்கிறேன். சென்ற ஆண்டு வந்தபோது நியூயார்க் முதல் கலிஃபோர்னியா வரை காரிலேயே இருகரைப்பயணம் ஒன்றை மேற்கொண்டேன். இந்தியாவில் குமரி முதல் காஷ்மீர் வரை சென்று...

மூன்று அறிதல்முறைகள்

https://youtu.be/U3TXbSwrW1s அக்டோபர் 14 ,2023ல் சியாட்டிலில் ஆற்றிய உரை, மூன்று அறிதல் முறைகள். எதிரில் இருந்த கலவையான பங்கேற்பாளர்களுக்காக கலைச்சொற்கள் எல்லாவற்றையும் கூடுமானவரை ஆங்கிலத்திலும் சொல்ல முயன்றிருக்கிறேன் என நினைக்கிறேன்.

பூன் முகாம்

எல்லா மகத்தான முயற்சிகளும் 'Why not?' என்னும் ஒற்றைச்சொல்லில் இருந்து தொடங்குகின்றன என்று நான் அவ்வப்போது நினைப்பதுண்டு. குறிப்பாக என் செயல்கள் எல்லாமே அப்படி தோன்றியதுதான். குஞ்சன் நம்பியார் துள்ளல்பாட்டில் சொல்வதுபோல "உண்டிருந்ந...