குறிச்சொற்கள் அபிமன்யூ
குறிச்சொல்: அபிமன்யூ
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22
யுதிஷ்டிரர் மீண்டுவிட்டதை அறிவித்த முரசொலி கர்ணனை சீற்றம்கொள்ள வைத்தது. “அறிவிலிகள்! வீணர்கள்!” என்று கூவியபடி வில்லை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்தான். பற்களை நெரித்தபடி அவன் தன் அம்புகளை மேலும் விசையுடன் தொடுத்தான். அவன்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-63
மாளவ மன்னர் இந்திரசேனர் படைக்கலத்துடன் தேரிலேறிக்கொண்டபோது படைத்தலைவன் சந்திரஹாசன் அருகே வந்து தலைவணங்கினான். அவர் திரும்பிப்பார்க்க “அனைத்தும் ஒருங்கிவிட்டன, அரசே. நமது படைவீரர்கள் இன்று வெல்வோம் என்று உறுதி கொண்டு களம் எழுகிறார்கள்”...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62
சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் கூர்ஜர மன்னர் சக்ரதனுஸ் பிருஹத்பலனை அணுகி மெல்லிய குரலில் “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார். பிருஹத்பலன் “நாம் கோழைகள். நம்முள் ஒற்றுமையில்லை. அந்த நெறியிழந்த அந்தணனும் திருட்டுஷத்ரியனாகிய அவன்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56
திருதராஷ்டிரர் சங்குலனால் ஒரு துணிப்பாவையென கையாளப்படுவதை பார்த்தபடி சஞ்சயன் வாசலில் நின்றிருந்தான். நீராடி முடித்த அவன் உடல் காலைக்காற்றால் உலரத்தொடங்கிவிட்டிருந்தது. ஆனால் நாட்கணக்காக நன்கு துயிலாத அவன் உடல் தளர்வை உணர்ந்தது. வாயில்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-47
பீலன் அனிலை தலைதாழ்த்தி செருக்கடிப்பதை கேட்டான். அது போருக்கு கிளம்பவிருக்கிறது என்பதை உணர்ந்ததும் திகைப்புடன் இருபுறமும் பார்த்தான். புரவிகள் அனைத்தும் செவிகோட்டி ஒலிக்காக கூர்ந்து நின்றிருந்தன. அனிலை முன்வலக்காலால் மண்ணை கிண்டியது. மீண்டும்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45
ஒவ்வொரு திசையிலிருந்தும் போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. கடோத்கஜன் பிரக்ஜ்யோதிஷத்தின் படைகளை மத்தென கலக்கிக்கொண்டிருந்தான். முன்னூறு பேர் கொல்லப்பட்டுவிட்டனர். பகதத்தனுக்கும் கடோத்கஜனுக்கும் நேர்ப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகதத்தன் மூன்று முறை எறிகதை வீச்சுக்கு ஆளானார். கவசங்கள்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-27
பகுதி நான்கு : களியாட்டன்
மருத்துவநிலை நாளுக்குநாள் விரிந்து குறுங்காட்டுக்குள் புகுந்து பரவியிருந்தது. கைக்கு சிக்கிய அனைத்துப் பலகைகளாலும் ஏழடுக்காக படுக்கைகளை அமைத்திருந்தனர். உடைந்த தேர்தட்டுகளும் மூங்கில் துண்டுகளும் காட்டிலிருந்து வெட்டி கொண்டுவரப்பட்ட மரத்துண்டுகளும்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25
கொந்தளிக்கும் படை நடுவே அலையில் எழுந்தமைந்து சுழன்றுகொண்டிருந்த அபிமன்யூவின் வலப்பக்கம் பின்காப்போனாக தேரில் வில்பூண்டு நின்றிருந்தான் பிரலம்பன். சாத்யகி அபிமன்யூவின் தேரிலேறி அதை பின்னால் ஓட்டிச்சென்று படைகளில் ஆழ்த்தி நிறுத்தியபின் பாய்ந்திறங்கி மீண்டும்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23
லட்சுமணன் பீஷ்மரை முதலில் பார்த்தபோது அவரும் விஸ்வசேனரும் உரையாடிக்கொண்டு வருவதை கண்டான். தன் அம்பையும் வில்லையும் எடுக்க குனிந்தபோதுதான் அதிர்ச்சிகொண்டு நிமிர்ந்து பார்த்தான். பீஷ்மர் தனக்குள் என தலைகுனிந்து கையசைத்து மெல்ல முணுமுணுத்தபடி...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-10
யுயுத்ஸு அபிமன்யூவின் தேரை அமரத்தில் அமர்ந்து செலுத்திக்கொண்டிருந்தான். பீஷ்மரின் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்த அர்ஜுனனை கேடயப்படை காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டிருந்தது. “தடுத்து நிறுத்துக... பிதாமகரை தடுத்து நிறுத்துக… சூழ்க! சூழ்க!” என திருஷ்டத்யும்னனின்...