தினசரி தொகுப்புகள்: August 2, 2024
மானஸாவின் காலடியிலிருந்து…
முதற்கனல் நாவலை எழுதியபோது இருந்த அனுபவமென்ன என்று ஒரு மலையாள இதழாளர் கேட்டார். ’அதை எப்படி நினைவுகூர முடியும்? அதன் நினைவுப்பதிவு என்பது ஒரு சிறு துளியாகவே இருக்க முடியும், அது எவ்வகையிலும்...
தமிழ்விக்கி- தூரன் விழா விருந்தினர்: க.த. காந்திராஜன்
க.த. காந்திராஜன் மதுரை, கரிக்கையூர் பகுதிகளைத் தன் முதன்மை ஆய்விடமாகக் கொண்டவர். தமிழகத்தில் ஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள், பாறை செதுக்கோவியங்கள், வீரன் கற்களை இவர் கண்டெடுத்துள்ளார். நீலகிரி மாவட்டப் பகுதியிலுள்ள கரிக்கையூர் பாறை...
சுனையில்… கடிதம்
அன்புள்ள ஜெ,
முதற்கனலை வாசித்தேன். நம் புராணங்கள் எந்த நம்பிக்கைகளை, அறங்களைப் போதிக்கின்றன என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் அரசியலும் சமூக பார்வைகளையும் பொருத்து மாறுபடலாம். ஆனால், கலையைத் தேடுபவர்களுக்கு அது பெரிய உணர்ச்சிகளையே கடத்துகிறது. மனித உறவுகளின் அதன் நாடகங்களின் முடிவில்லா ஆட்டத்தை எதிலாவது தொடர்புகொண்டு அதிலிருந்து மேலேறி இன்னும் வாழ்க்கையின் மெய்யென அறிய அல்லது வழி என ஒன்று உண்டா என்கிற தேடலில் நுழைய புராணங்கள் மிகமுக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றன.
இன்றும் மகாபாரதம், ராமாயணம் தொடர்புடைய கதைகள் இல்லாத தெருக்கூத்து அரிது. எங்கோ இருந்து எவ்வளவோ முன்னேறிய பிறகும் இன்றும் அக்கதாபாத்திரங்களின் அறமும், கீழ்மையும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஏன்?ஒவ்வொருவரும் காவிய நாயகர்களில் தங்களைப் பொருத்தி போலியான அவனிலிருந்து மிகையான உணர்ச்சிகளை உருவாக்கிக் கொள்கிறான். இவர்கள் என்னைப்போல் இன்னொரு மனிதன் இல்லை. எங்கோ, எப்போதோ வாழ்ந்த...
சிந்தனையும் சிடுக்கும்
ஓர் ஐயம், அல்லது வினா நடைமுறை சார்ந்த தளத்தில் இருந்து எழவேண்டும். நாம் நடைமுறையில் ஒன்றைச் செய்து அந்த ஐயத்தை அடையலாம். அல்லது அப்படிக் கற்பனை செய்து அடையலாம். அவ்வாறன்றி நடைமுறையே இல்லாமல்...