2023 May 29

தினசரி தொகுப்புகள்: May 29, 2023

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? சவார்க்கர் கோழையா? இன்று சவார்க்கர் அளித்த மன்னிப்புக் கடிதம் ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. இதைச்சார்ந்த காங்கிரஸின் பேச்சுக்கள் எளிய கட்சித்தொண்டர்களால் சொல்லப்படுமென்றால் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. கொள்கை வகுப்பாளர்களுக்கோ தலைவர்களுக்கோ இன்னும் சற்று...

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?

அன்புள்ள ஜெ, சாவர்க்கர் பற்றிய இன்றைய ஊடகவியலாளர்கள் சொல்லும் கருத்துகளை தற்போது கவனிக்கையில், காந்தி சிறையில் கண்ணியமாக நடத்தப்பட்டார், போரட்டங்களில் கூட அவர் முன் நின்றாலும் அடி வாங்கியதில்லை, ஆனால் சாவர்க்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டார் என்கின்றனர்.   எனில்,...

பொன்னிற வெளிச்சம்

பொன்னிறப்பாதை வாங்க  பொன்னிறப்பாதை வாங்க பொன்னிறப்பாதையில் இருக்கும் கட்டுரைகள் எல்லாமே வெவ்வேறு தருணங்களில் என் வாசகர்களுடனான உரையாடல் வழியாக உருவானவை.  இத்தகைய வாய்ப்பு சென்ற தலைமுறையில் எழுத்தாளர்களுக்கு அமைந்ததில்லை. இதை இயல்வதாக்கியது இணையம். ஒவ்வொரு நாளும் கடிதங்கள் பெறுகிறேன். பதில் எழுதுகிறேன். என் எழுத்துலகை இந்த உரையாடல் வலுவாக்கியது. சமகாலத்தன்மையையும் நடைமுறைத்தன்மையையும் அளித்தது. நான் எழுதுபவை செவ்வியல் படைப்புகள். பெருங்கனவுகள். இந்த உரையாடல் அவற்றை மண்ணில் வேரூன்றி நிலைகொள்ளச் செய்தது. இவை அறிவுரைகள் அல்ல. அறிவுரைகள் என்பவை அறிந்தவிந்த ஒருவன் அறியாதோருக்குச் சொல்பவை. இவை அனுபவப்பகிர்வுகள் மட்டுமே.நான் கடந்துவந்த வாழ்க்கையையும், அதில் நான் அறிந்தவற்றையும் இதில் பகிர்ந்துகொள்கிறேன்.  அது இந்த வாசகர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வதற்கு நிகரான எதிர்வினை மட்டுமே. நான் கடுந்துயரின், தனிமையின் ,அவநம்பிக்கையின் இருளில் இருந்து ஒளியை என்னுள் இருந்து கண்டுகொண்டேன், என்னை உருவாக்கிக் கொண்டேன். நான் கண்டடைந்த ஒளியைப்பற்றியே இந்நூலில் பேசுகிறேன். நானடைந்த துயரை, தனிமையை, அவநம்பிக்கையை தாங்களும் அடைந்தவர்களுக்காக. அவர்களுக்கு அது உதவியது என்று அறிந்திருக்கிறேன். ஓரு புனைவெடுத்தாளன் இப்படி சிந்தனைகளை, அனுபவங்களை நேரடியாக எழுதலாமா என்னும் கேல்வி எழலாம்.இலக்கியவாதிகள் சிலர் ஓர் கதையாசிரியன் கதையினூடாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வதுண்டு. என் எண்ணம் அது அல்ல. நான் எல்லாவற்றையும் முடிந்தவரை நேரடியாக, முடிந்தவரை வெளிப்படையாக, முடிந்தவரை எளிதாகப் பேசவே விரும்புகிறேன். இடைவிடாமல் அதற்கு முயல்கிறேன். அவ்வண்ணம் சொல்லிவிட முடியாதவை, சொல்லிச் சொல்லி எஞ்சுபவை மட்டுமே உயர்ந்த புனைவாக வெளிப்பட இயலும் என நினைக்கிறேன். என் படைப்புகளின் மர்மங்கள், முடிவிலி வரை செல்லும் ஆழ்தளங்கள் எல்லாமே இந்த வகையில் என்னால் தெளிவாகச் சொல்லிவிட முடியாதவற்றால் ஆனவையே. பொன்னிறமான பாதை என ஒன்று உண்டா? அவ்வண்ணம் இயற்கை நிகழ்கிறதா? இல்லாமலிருக்கலாம். ஆனால் நம்மால் பொன்னிறமான பாதையை நம் அகத்தின் ஒளியால் உருவாக்கிக் கொள்ள முடியும். நம்மை மீறி இருள் வருமென்றால் அது நம்மை மீறியது என்னும் நிம்மதியேனும் நமக்கு எஞ்சும். இக்கட்டுரைகள் காட்டும் தெளிவு அன்றாடத்தின் பல்வேறு கருத்துச்சிடுக்குகளில்  சிக்கி உளச்சோர்வடைந்த இளம் நண்பர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. அவ்வகையில் நான் நிறைவடைகிறேன் ஜெ

மு.தங்கராசன்

சிங்கப்பூர் பிரித்தானிய, ஜப்பானிய ஆதிக்கங்களின் கீழ் இருந்த காலத்திலும் மலாயாவுடன் இணைந்து, பின்பு தனி நாடாகப் பிரிந்தபோதும் அங்கு வாழ்ந்தவர் மு. தங்கராசன். இந்த அரசியல் மாற்றங்கள் அங்கு வாழ்ந்த தமிழர்களுடைய வாழ்வில்...

கற்றல், கடிதம்

கற்றலை அளிப்பது திரு ஜெயமோகன் குழுவினருக்கு, இவண் மரகதவல்லி. பெங்களூரில் வசிக்கிறேன். ஜெ-வின் இந்தக் கட்டுரையை https://www.jeyamohan.in/182655/, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். இதில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் தொண்டு நிறுவன அமைப்புகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் படிக்க...

ஆலயக்கலை- கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன், National treasure, The Mummy போன்ற மேற்கத்திய படங்களை பார்த்திருப்பீர்கள், புராதானமான கட்டிடங்களை தேடி அதிலுள்ள புதிர்களை கட்டவிழ்த்து சரியான பொத்தானையோ, லிவரையோ அழுத்திய மறு நிமிடம் பிரம்மாண்டமான சுவற்றின்...

கவிதையும், ரசனை மதிப்பீட்டின் எல்லையும்

இனிய ஜெயம் மற்றும் ஒரு இனிமை நிறைந்த காவிய முகாம். மூன்று நாட்கள் இரவு பகல் முழுக்க உரையாடல்கள். முகங்களின் பெருக்கின் ஊடே மனம் வழக்கமாக வரும் ஆனால் இம்முறை வர இயலாமல் போன...