2022 June 24

தினசரி தொகுப்புகள்: June 24, 2022

மாலனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது.

2021 ஆம் ஆண்டுக்கான மொழியாக்கத்துக்கான சாகித்ய அக்காதமி விருது மாலனுக்கு அவர் மொழியாக்கம் செய்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்னும் நூலுக்காக வழங்கப்படுகிறது. மாலனுக்கு வாழ்த்துகள்

கோவை சொல்முகம், சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 18 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஆறாவது படைப்பான "வெண்முகில் நகரம்" நாவலின், 16 மற்றும்...

தமிழ் விக்கி தூரன் விருது

தமிழ் விக்கி- தூரன் விருது தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் தமிழ் விக்கி - தூரன் விருதுகள் 2022 ஆண்டு முதல் அளிக்கப்படவுள்ளன. இவ்வாண்டுக்கான விருது மானுடவியல் -நாட்டாரியல் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதிக்கு...

குழந்தைகளும் நாமும்

நமது குழந்தைகள் அன்புள்ள ஜெ குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை கண்டேன். அதைப்பற்றி ஏராளமான வசைகள். பெரும்பாலான வசைகளை வாசிக்கையில் ஒன்று தோன்றியது, நமக்கு உண்மையிலேயே புரிந்துகொள்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. எதையுமே படித்து உள்வாங்கும்...

எஸ்.ராமகிருஷ்ணன்கள்

அன்புள்ள ஜெ எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி தமிழ் விக்கியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்றுமுள்ள ஒரு சந்தேகம் அகன்றது. இரண்டு எஸ்.ராமகிருஷ்ணன்கள் உள்ளனர். இருவருமே முக்கியமானவர்கள். இருவரைப்பற்றிய பதிவிலும் இன்னொருவர் குறிப்பிடப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு கலைக்களஞ்சியத்திற்குப் பின்னால்...

உலகின் மிகச்சிறந்த காதல்கதை – டெய்ஸி

அன்புள்ள ஜெ ரஷிய இலக்கியங்களை பற்றி நிறைய படித்திருந்தாலும் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் படிக்க ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. “போரும் அமைதியும்”, “அசடன்” ஆகியவைகளை எடுத்துப் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். போன வாரம்...

கரசூர் பத்மபாரதி -கடிதங்கள்

கரசூர் பத்மபாரதி பற்றி.... அன்புள்ள ஜெ கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி- தூரன் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய இரண்டு ஆய்வேடுகளையும் படித்துள்ளேன். முக்கியமான நூல்கள். மானுடவியலாளர் என்றுதான் அவரை அறிந்திருக்கிறேன்....

சுஜாதா, கடிதம்

சுஜாதா பற்றி... அன்புள்ள ஜெ சுஜாதா பற்றிய பதிவை வாசித்தேன். சுஜாதா பற்றிய தமிழ் விக்கி பக்கத்தை வம்புகள் வழியாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். வேறு எல்லா விக்கி பக்கங்களையும் அவர்களின் சாதனைகளைச் சொல்லி அடையாளம் காட்டினீர்கள்....