தினசரி தொகுப்புகள்: March 23, 2021
புதுவை வெண்முரசு கூடுகை 41 அழைப்பிதழ்
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் ,
நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 41 வது கூடுகை 27.03.2021 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம்
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை” ,
பகுதி ஒன்று. பெருநிலை -1,2,3,4.
பகுதி இரண்டு. சொற்கனல் -5,6,7,8,9,10 பதிவுகள் குறித்து நண்பர்
தாமரைக்கண்ணன் உரையாடுவார் .
இடம்:
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை -605 001
தொடர்பிற்கு:-
9943951908 ; 9843010306
நிறைவிலி [சிறுகதை]
டாப்ஸ் ஆன் கபேயில் நான் என் நண்பர் பரிந்துரைத்த பெண்ணுக்காக காத்திருந்தேன். எங்கள் நிறுவனம் இந்த ஆண்டுடன் ஐம்பதாண்டு நிறைவுசெய்கிறது. அடுத்த ஆண்டு முழுக்க நாங்கள் நடத்தும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், அதையொட்டிய...
விசை, தீற்றல்- கடிதங்கள்
விசை
அன்புள்ள ஜெ
விசை ஒர் அற்புதமான சிறுகதை. கூர்மையான ஒற்றைப்படிமம் மட்டுமே கொண்ட கதை. உங்கள் கதைகளில் இந்த இரண்டுவகை கதைகளும் உள்ளன. வலுவான நாடகீயமான சம்பவங்களும் பிளாட்டும் உள்ள கதைகள். இந்தவகையான...
இருளில், குமிழிகள்- கடிதங்கள்
இருளில்
இருளில் கதை ஒரு அற்புதம்.ஒவ்வொருவருக்கும் இப்படியான ஏதோ ஒரு அலைதல் இருக்கிறது.நான் அம்மாவை வெகுகாலம் இப்படி தேடிக் கொண்டே இருந்தேன் மீண்டு வருவாள் என.அதை நிறுத்திக் கொண்ட பின்னரே உலகம் சற்று...
ஆமென்பது, நகை – கடிதங்கள்
நகை
அன்புள்ள ஜெ
முதலில் நகை என்ற கதை ஆழமான ஒவ்வாமையை அளித்தது. எங்கிருந்து ஏங்கே தாவுகிறது இந்தக்கதை என்று நினைத்தேன். அதெப்படி போர்ன் நடிகையுடன் ஒரு கௌரவமான பெண்ணை ஒப்பிடுவது என்று நினைத்தேன்....
வெய்யோன் வாசிப்பு
அன்புள்ள ஜெ,
வெண்முரசு வரிசை நாவல்களில் வெய்யோன் நாவலை இன்று வாசித்து முடித்தேன். கர்ணன் என்ற ஒரு மனிதன் பலவாறாக என் சிறுவயதில் இருந்தே என்னுள் நுழைந்திருந்த ஒரு ஆளுமை. மகாபாரத கதைகளை செவி வழியாக அறிய...