தினசரி தொகுப்புகள்: March 15, 2021
மலைபூத்தபோது [சிறுகதை]
நூறாண்டுகளாக, நூறுநூறு ஆண்டுகளாக, அப்படி ஏராளமான நூறாண்டுகளாக இந்த கரடிமலை, இந்த கைதையாறு, நீரோட்டத்தை ஏறிக்கடப்பதற்கான பல்வரிசைப் பாறைகள், அப்பாறைகளின் நடுவே ஓசையுடன் எழும் நுரை எல்லாமே இப்படியேதான் இருக்கின்றன என்று பாட்டுகள்...
ஆமென்பது, விருந்து – கடிதங்கள்
ஆமென்பது…
அன்புள்ள ஜெ
பலவகையான கதைகள். ஆனால் எனக்கு இந்த ஆமென்பது ஒரு பெரிய அனுபவமாக அமைந்த கதை. கற்பனையே இல்லை, உண்மையான வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது
ஒரு முழுவாழ்க்கையும் கூர்மையான விமர்சனம்...
தீற்றல், படையல் -கடிதங்கள்
தீற்றல்
அன்புள்ள ஜெ
கொஞ்சம் வயதாகி நனவிடை தோய்தல் ஆரம்பிக்கும்போது ஒரு பெரிய மர்மம் மனதிலே வரும். நாம் அடைந்த அந்த அனுபவங்கள் எல்லாம் எங்கே போகின்றன? அவை நமக்கு எவ்வளவு பெரியவை. எவ்வளவு...
குமிழிகள், கூர்- கடிதங்கள்
கூர்
அன்புள்ள ஜெ
கூர் என்னும் கதை சட்டென்று இதுவரை வந்த கதைகளின் சுவையையே மாற்றிவிட்டது. முற்றிலும் வேறொருவகையான கதை. அந்தக்கதையின் சித்திரம் மிக எளிதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அதன் வீச்சு கூர்ந்து வாசித்தால்தான்...
ஏழாம் கடல், விருந்து- கடிதங்கள்
விருந்து
அன்புள்ள ஜெ
விருந்து கதையை ஒரு ஃபேபிள் என்று சொல்லலாம். ஃபேபிள் என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் ஒரு பாஸிபிலிட்டி மட்டும்தான். நாம் வாழும் வாழ்க்கையை வேறுவேறு வகைகளில் இப்படிச் சொல்லிச் சொல்லிச்...
கந்தர்வன் யட்சன் – கடிதங்கள்
யட்சன்
அன்புள்ள ஜெ..
எப்படி யானை டாக்டர் கதை ஒருதொன்மமாக நிலை கொண்டு விட்டதோ அது போல யட்சனும் நிலை கொள்ளும் என நினைக்கிறேன்
அப்படி ஒரு சாதனைக்கதையை கந்தர்வன் என்ற பேரொளி மிக்க கதைக்கு...
பிரயாகை
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
வெண்முரசு நாவல் வரிசையின் ஐந்தாவது நாவல். பிரயாகை முக்கோண வடிவிலான நாவல். முதல் கோணம்: மகாபாரதத்தின் மையப் பாத்திரங்களின் பிரச்சனைகள், மன ஒருக்கங்கள் புலப்பட தொடங்கியிருப்பது. இரண்டாவது கோணம்: போர்...