தினசரி தொகுப்புகள்: March 12, 2021
இமையத்திற்குச் சாகித்ய அக்காதமி
இந்த ஆண்டு க்கான சாகித்ய அக்காதமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவலினூடாக தமிழ்ச்சூழலுக்கு அறிமுகமானவர் இமையம். ஓர் எழுத்தாளராக அவருடைய அறிமுகமும் அவர் பெற்ற ஏற்பும் முதன்மையாக...
இழை [சிறுகதை]
அந்தக்காலத்தில், அதாவது நான் சர்வீஸிலிருந்தபோது கிரேட் கோல்டன் பார்ஸி சர்க்கஸ் என்று ஒரு சர்க்கஸ் கூட்டம் எர்ணாகுளம் முதல் மதுரைவரை வளைத்து ஊர் ஊராக சர்க்கஸ் போட்டுக்கொண்டிருந்தார்கள். உள்ளூர் சர்க்கஸ் குழுக்கள் அன்று...
’ஆமென்பது’- அறிவும் உணர்வும் ஒரு விவாதம்.
ஆமென்பது…
அன்புள்ள ஜெ
‘ஆமென்பது’ என்ற கதை வாசித்ததிலிருந்து மிகவும் தொந்தரவு செய்தது. இக்கதையையொட்டி, கதையைத்தாண்டி, பல சிந்தனைகள். என்னால் என் சிந்தனைகளை கோர்வையாக முன்வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் மிகவும் சென்சிட்டிவான புள்ளியில்...
விருந்து, ஏழாம் கடல் – கடிதங்கள்
ஏழாம்கடல்
அன்புள்ள ஜெ
ஏழாம் கடல் ஒரு சிக்கலான கதை. அந்தக்கதையை சமூகச்சூழல், அரசியல்சூழல், காலகட்டம் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துப்பார்த்தாலொழிய புரிந்துகொள்ள முடியாது. அந்தக்கதைக்கு ஃப்ராய்டிசம் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் விளக்கம் அளித்தாலும் கதை அப்படியே நழுவிச்சென்றுவிடும்....
கடிதங்கள்
வணக்கம்,
விஜி வரையும் கோலங்கள் லஷ்மி மணிவண்ணனின் புத்தக வெளியீட்டு விழாவில் தங்களை நேரிடையாக பார்த்தும், தங்கள் பேச்சை நேரிடையாக கேட்கும் வாய்ப்பு அமைந்ததையும் எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தேன். நண்பன் டேவிட்டுடன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டேன்.நண்பன்...
படையல், தீற்றல் – கடிதங்கள்
படையல் சிறுகதை
அன்புள்ள ஜெ
படையல் கதையின் மையம் என்பது அந்தச் சிவனடியார் ரத்தத்தின் வழியாக மறுபடி பிறந்து எழுந்தது. ரத்தம் வழியாகச் சென்று அண்ணாமலையானை கண்டது. அதுவரை தீயாகத் தெரிந்த லிங்கம் வானமாக மாறியது....
கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்
கந்தர்வன்
அன்புள்ள ஜெ.,
'கந்தர்வன்' உங்களுடைய பல சாதனைக் கதைகளைப் போன்றே, ஒரு குறுநாவல் அளவுக்கே நீண்டிருந்தாலும்,கச்சிதமான, வெகு சுவாரசியமான ஒரு கதை. மொழ மொழவென தொப்பை குலுங்கும் முருகப்பன், வாழைக்குருத்தாய் வள்ளியம்மை, கோயில்...
குமிழிகள், கூர்- கடிதங்கள்
குமிழிகள்
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதை விவாதங்களை உருவாக்குவதைக் காண்கிறேன். அவற்றை வெறும் ஒழுக்கவியல் விவாதங்களாக என்னால் காணமுடியவில்லை. அவற்றில் அடிப்படைக் கேள்வி ஒன்று உள்ளது. ஒரு கதை அந்த அடிப்படைக் கேள்வியை சென்று...