தினசரி தொகுப்புகள்: August 14, 2019
சிறுகதை அரங்கும் சித்தேஸ்வரன் மலையும்
நான் மாலை ரயிலுக்கு ஈரோடு செல்வதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் முன்பதிவு செய்த பயணச்சீட்டைப் பார்த்தால் அதிகாலை ஆறுமணி. மாலை ஆறு மணி அல்ல. ஆகவே முழு இரவும் அமர்ந்து வெண்முரசு எழுதினேன். காலையில்...
அபி கவிதைகளின் வெளியீடு – கடிதங்கள்
மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் கலிஃபோர்னியாவிலிருந்து பூவேந்திரன் எழுதுகிறேன்.
கவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிப்பதன் மூலம் அபியின் கவிதைகளை பலர் வாசிக்க அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.
நான் 1982-1985 மேலூர் அரசு...
வீரப்ப வேட்டை
Veerappan: Chasing the Brigand
அன்பின் ஜெ,
சென்ற வாரத்தில் Veerappan : Chasing the brigand என்ற நூலை வாசித்தேன். வீரப்பனைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்த டிஜிபி விஜயகுமார்...
பயணம்- கடிதங்கள்
நடந்தே தீரணும் வழி…
பயணியின் கண்களும் கனவும்
அன்புள்ள ஜெ,
மாயனின், 'நடந்தே தீரணும் வழி' வாசித்தவுடன் எழுதத் தோன்றியது.
என் சி பி எச் வெளியிட்டுள்ள இராகுல் சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றி புராணம் வாசித்தேன். எத்திராஜுலு அவர்களின் மொழிபெயர்ப்பு....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45
“நெடும்பொழுது...” என்னும் சொல்லுடன் சதானீகன் தன்னுணர்வு கொண்டபோது அவன் எங்கிருக்கிறான் என்பதை உணரவில்லை. நெடுநேரம் அவன் போரிலேயே இருந்தான். குருதிமணம், அசைவுகளின் கொந்தளிப்பு, சாவில் வெறித்த முகங்கள். பின்னர் ஒரு கணத்தில் அவன்...