வெண்முரசு மழைப்பாடல்

மழைப்பாடல்

விதைமுளைக்கும் மழை

மழைப்பாடல் செம்பதிப்பு வாங்க மழைப்பாடல் மின்னூல் வாங்க வெண்முரசு எழுதி முடித்தபின் அதிலிருந்து உளம் விலகி பிறிதொருவனாக ஆகி இங்கு நின்றிருந்து அந்நாட்களைத் திரும்பிப்பார்க்கையில் ஒரு பெரும் தியான அனுபவத்தின் வெவ்வேறு தருணங்களாகவே அதை எண்ண...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92

பகுதி பதினெட்டு : மழைவேதம் ஏழு பாய்கள் கொண்டிருந்தாலும் காற்றே இல்லாமலிருந்தமையால் படகு துடுப்பின் விசையால்தான் கங்கையை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. எட்டு குகர்களும் தசைகள் இறுகி நெகிழ, மூச்சு ஒன்றையே ஒலியாகக் கொண்டு,...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91

பகுதி பதினெட்டு : மழைவேதம் கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90

பகுதி பதினெட்டு : மழைவேதம் முதல்கதிர் எழுவதற்கு நெடுநேரம் முன்னரே மகாவைதிகரான காஸ்யபர் தன் ஏழு மாணவர்களுடன் சதசிருங்கத்துக்கு வந்துசேர்ந்தார். அவரது வருகையை முதலில் வழிகாட்டி வந்த சேவகன் சங்கு ஊதி அறிவித்ததுமே...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89

பகுதி பதினெட்டு : மழைவேதம் மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் குந்தி மைந்தர்கள் முற்றத்தில் தனித்து விளையாடிக் கொண்டிருப்பதை அகத்தில் வாங்கினாள். அனகையிடம் "அரசர் எங்கே?" என்றாள். "இதோ வந்துவிடுகிறோம் என்று சொல்லி சென்றார்கள்" என்றாள்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88

பகுதி பதினேழு : புதியகாடு இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87

பகுதி பதினேழு : புதியகாடு மீண்டும் சதசிருங்கத்திற்கு திரும்பும்போது மாத்ரி கருநிறைந்திருந்தாள். குந்தியின் கைககளைப்பிடித்தபடி பீமன் நடந்து வந்தான். மூன்று வயதே ஆகியிருந்தாலும் அவன் குந்தியின் இடையளவுக்கு வளர்ந்திருந்தான். ஏழுமாதத்திலேயே அவன் எழுந்து நடக்கவும்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86

பகுதி பதினேழு : புதியகாடு புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85

பகுதி பதினேழு : புதியகாடு சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84

பகுதி பதினேழு : புதிய காடு குந்திதான் முதலில் பார்த்தாள். கீழே மலையடிவாரத்தில் சிறிய வெண்ணிறக் காளான் ஒன்று பூத்துநிற்பதுபோல புகை தெரிந்தது. "அது புகைதானே?" என்று அவள் மாத்ரியிடம் கேட்டாள். "புகைபோலத்தெரியவில்லை அக்கா....