நீலமென்பவன்
நீலம் செம்பதிப்பு வாங்க
நீலம் மின்னூல் வாங்க
(விஷ்ணுபுரம் வெளியீடாக வெளிவரவிருக்கும் நீலம் நாவலின் நான்காம் பதிப்புக்கான முன்னுரை)
வெண்முரசு அதன் இறுதியை நெருங்கும்போதே நான் அந்தப் புனைவுலகிலிருந்து வெளிவந்து, மொழிநடையிலும் விவரணையிலும் உள்ளடக்கத்திலும் முற்றிலும் வேறான...
நீலச்சிலை
ஜெ,
வெண்முரசு நாவல்கள் அனைத்தையும் வாங்கியவன் நான். ஒரு நாவலுக்கு படங்கள் அவசியமில்லை என்பது என்னுடைய கருத்து. மேலும் உங்கள் நாவல்கள் என்பவை மொழிவழியாக உருவாக்கும் படங்கள். அவைகளை வண்ணங்களின் படங்கள் இல்லாமலாக்கிவிடும் என்ற...
நீலம்- மொழி மட்டும்
ஆசிரியருக்கு வணக்கம்.
நீண்ட நாட்களுக்குப்பின் எழுதுகிறேன். நீலம் வாசிக்கத் தொடங்கி ஒரு கட்டத்திற்குமேல் முடியாமல் நிறுத்திவிட்டேன். வாசிக்கத் தொடங்கியபொழுது ஒவ்வொரு சொல்லாய்
எழுந்து வந்து என் கைப்பிடித்து தனி ஒரு உலகிற்கு அழைத்துச் சென்றன.. அங்கு...
நீலம்
அன்புள்ள ஜெயமோகன்
நீலம் (சாதாரண பதிப்பு) வந்துவிட்டது. அதை http://www.nhm.in/shop/9789384149246.html இந்த சுட்டியில் வாங்கலாம்.
நீலம் செம்பதிப்பு இன்னும் சில நாள்களில் வந்துவிடும். வந்ததும் சொல்கிறேன்.
அன்புடன்
பிரசன்னா
நீலமெனும் வெளி
நீலம் ஒரு கனவு போல என்னிடமிருந்து வெளிப்பட்ட நாவல். மகாபாரத நாவல்வரிசையில் அது மட்டும் ஓர் உச்சம். அதை பக்தி என்றோ பித்து என்றோ சொல்லவிரும்பவில்லை. அவை வெறும் சொற்கள். அத்தருணத்தில் அது...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37
பகுதி பன்னிரண்டு: 2. கொடி
இடைசுற்றி சுழல்கையில் பாவாடை இதழ்விரித்து மலராவதைக் கண்டு ராதை சிரித்துக்கொண்டாள். காலைமுதலே சுழன்று சுழன்று பின் அமர்ந்து கொண்டிருந்தாள். கைவிரித்து “என் மலர்! உலகிலேயே பெரிய மலர்!” என்று...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36
பகுதி பன்னிரண்டு: 1. முடி
இடையில் மஞ்சள்பட்டு சுற்றி இருகாலிலும் சலங்கை கட்டி தலையில் செந்நிறப்பாகை சூடி தார்தொடுத்த பாரிஜாதம் அணிந்து குறுமுழவை மீட்டும் கரங்களுடன் மங்கலச்சூதன் மன்றில் வந்து நின்றான். முழவொலி கேட்டு...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35-1
பகுதி பதினொன்று: 4. அழிதல்
உடல்தழுவி உளமழிந்து மலைச்சுனைக்கரையில் மலர்ந்தோம். பொன்மீது படிந்த நீலம். பகல்மேல் அமைந்தது இரவு. தத்தும் கால்கொண்டு நடந்தது நீலக்குருவி. சிறகடித்து மண்ணில் சுழன்றது. சிற்றுகிர்கள் படிந்த சதுப்பு. பெருமுரசத்...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35
பகுதி பதினொன்று: 4. அழிதல்
காலையில் வந்து கையருகே அமர்ந்து குறுஞ்சிறகடித்து குரலெழுப்பியது நீலக்குருவி. வானம் உருகிச் சொட்டிய துளி. கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம். கருகுமணி வாய்திறந்து 'கண்ணா! கண்ணா!' என்றது. துயில்...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34
பகுதி பதினொன்று: 3. குமிழ்தல்
இவையனைத்தையும் இவ்வுலகனைத்தையும் அள்ளி எடுத்து அணைத்திறுக்கி என் அனல் சேர்த்து அழிக்கும் விரைவுடன்தான் இல்லம் விட்டெழுந்தேன். நான் சென்ற வழியெங்கும் தென்றல் வெம்மைகொண்டது. என் உடல்தொட்ட தளிரிலைகள் துடித்துச்...