வெண்முரசு சொல்வளர்காடு

சொல்வளர்காடு

சொல்தளிர்க்கும் பாதை

மகாபாரதத்தின் வனபர்வம் அனேகமாக முழுமையாகவே பிற்சேர்க்கை என்பது ஆய்வாளர் கூற்று. அதில் பாரதத்தின் கதைச்சரடு இல்லை. பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றார்கள் என்னும் கதையை ஒரு களமாகக் கொண்டு இந்தியமரபில் புழங்கிய அத்தனை கதைகளையும்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60

சுஃப்ர கௌசிகரின் குருநிலையில் பாண்டவ நால்வரும் திரௌபதியும் தருமனுக்காகக் காத்து தங்கியிருந்தார்கள். வேள்விநெருப்பில் மெய் அவியாக்கி முழுமைபெற்ற சுஃப்ர கௌசிகரின் சாம்பலுடன் அவரது மாணவர்கள் மித்ரனும் சுஷமனும் கிளம்பிசென்றுவிட்டபின் அவர்கள் மட்டுமே அங்கே...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 59

பத்தாம் காடு : கந்தமாதனம் தளர்ந்த காலடிகளுடன் ஏறத் தொடங்கியபோது மலை நேர்முன்னாலிருந்தது. மேலே செல்லச் செல்ல பக்கவாட்டிலும் முளைத்துப் பெருகி மேலெழத் தொடங்கியது. சற்று நேரத்திலேயே பின்பக்கத்திலும் மலையடுக்குகள் மாபெரும் நுரைபோல உருளைப்பாறைகளின்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58

விழித்தெழுந்தபோது தருமன் தன்னை யட்சர்களின் நடுவே கண்டடைந்தார். அஞ்சி எழப்போனபோது “அஞ்சற்க!” என்ற குரல் கேட்டது. நாரையின் குரல் எனத் தெரிந்தது. மீண்டும் அவர் எழமுயன்றார். “இது பகயட்சர்களின் நிலம். பகர்களின் அரசனாகிய...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57

வெண்களர் மண்ணில் கால்கள் புதைய தள்ளாடி தருமன் நடந்தார். விழுந்துவிடுவோம் என்னும் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. நடந்துகொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வும் ஒரே இடத்தில் காற்றில் மிதப்பதாக இன்னொரு தன்னுணர்வும் ஒன்று கலந்து ஓடின....

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56

காலையில் புலரிச்சங்கோசையிலேயே எழுந்து நீராடி புதிய மரவுரியாடை அணிந்து தருமனும் பாண்டவர்களும் திரௌபதியுடன் வேள்விச்சாலைக்கு வந்தனர். வேதசாலை முழுமையாக தூய்மை செய்யப்பட்டு புதுத்தளிர்த் தோரணங்களும் மலர்மாலைகளும் தொங்கவிடப்பட்டு காத்திருந்தது. எரிகுளத்தில் பலாசமும் ஆலும்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55

ஒன்பதாம் காடு : யக்‌ஷவனம் இருபக்கமும் அடர்ந்த காடு சீவிடுகளின் ரீங்காரமாகவும் காற்றோசையாகவும் குரங்கு முழக்கங்களாகவும் பறவைக் கலைவொலிகளாகவும் சூழ்ந்திருக்க நடுவே வகுந்து சென்ற காட்டுமாடுகளின் கால்களால் உருவான பாதையில் பாண்டவர்கள் சென்றனர். உச்சிப்பொழுதுவரை...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54

நூறு கிளைகளும் ஆயிரம் விழுதுகளும் கொண்டு தனிமரமே காடென்றான மைத்ரி என்னும் ஆலமரத்தடியில் அமைந்த சிறுகொட்டகையில் திசையாடை அணிந்த சமணப்படிவர் தன் முன் அமர்ந்திருந்த தருமனிடம் அறவுரை சொன்னார். “அரசே, இப்புவியில் அறமென்றும்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53

கிருதயுகத்தில் கோசலநாட்டில் சோமகன் என்னும் சந்திரகுலத்து அரசன் ஒருவன் ஆண்டிருந்தான். நூறுபெண்களை மணந்து ஐம்பதாண்டுகள் வாழ்ந்தும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மைந்தரின்மை அவனை நோயென பீடித்தது. தன்னை நோக்கும் எவ்விழிகளிலும் தனக்கு மைந்தரில்லை...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52

அடுமனை வாழ்க்கை சொல்லற்றதாக இருந்தது. அங்கே ஒற்றைச்சொல் ஆணைகள் இருந்தன. பின்னர் அவையும் மறைந்தன. நாள்முழுக்க சொற்களில்லாமலேயே சென்றது. கைகளும் கால்களும் விரைந்துகொண்டிருந்தபோது உள்ளம் சொற்களை கொப்பளித்துக்கொண்டிருந்தது. செயலும் சொல்லும் இரு தனி...