ஆரியர் வருகை -கடிதங்கள்

இனங்களும் மரபணுவும்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

ஏற்கனவே திராவிட -ஆரிய இனம் பற்றிய சமீபத்திய கட்டுரையை “ஹிந்து ஆங்கில பதிப்பில்’கடந்த வாரம் படித்ததில் இருந்து அது பற்றிய தங்கள் கருத்தை கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன்.இன்று.வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு தங்களின் விரிவான இந்த – இனங்களும் மரபணுவும்பதிலின் மூலம் தெளிவு பெற்றேன்.இருந்தபோதிலும் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் அக்கட்டுரையில் கொடுத்திருந்த திரு.அரவிந்த நீலகண்டன் அவர்களின் எதிர்வினையில் மிகச் சரியாக குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் – when writing on a much-debated topic like this one, they should at least show the intellectual sincerity to mention divergent points of view, and not try to create a false impression for the lay reader that they have been conclusively addressed. That is neither very honest nor commendableஇது ‘ஹிந்து’போன்ற பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பதாகுமா? பாரபட்சமில்லாத இரு தரப்பு உண்மைகளையம் தங்கள் வாசகர்களுக்கு அளிக்கவேண்டும் என்ற தொழில் தர்மம்( !?) இவர்களுக்கெல்லாம் கிடையாதா? இதில் இவர்களின் உள்நோக்கம்தான் என்ன?

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

ராஜீவ்

டியர் ஜெமோ,

சமீபத்தில் வந்த ஆரிய வருகை பற்றிய இரண்டு கட்டுரைகள் அவற்றின் மூல ஆராய்ச்சி கட்டுரையும் உங்கள் கவனத்திற்கு.

http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

https://m.facebook.com/story.php?story_fbid=1586551481363460&id=100000258690178

https://bmcevolbiol.biomedcentral.com/articles/10.1186/s12862-017-0936-9

ராஜீவ்

இனங்களும் மரபணுவும்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37
அடுத்த கட்டுரைபொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்