இலங்கையின் முன்னோடி இதழாளர் ‘மல்லிகை’ ஜீவா என்னும் டொமினிக் ஜீவா. இடதுசாரி நோக்குள்ளவர். மல்லிகை என்னும் சிற்றிதழை பிடிவாதமாக அரைநூற்றாண்டுக்கும் மேலாக நடத்திவந்தவர். இலங்கையில் இன்றிருக்கும் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவர். 27 -6-2017 அன்று அவருக்கு 90 அகவை நிறைவடைகிறது. தமிழிலக்கியவாதிகளால் நிறைவுடன் நினைக்கத்தக்க ஆளுமை
ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மல்லிகை முன்பு எனக்கு வந்துகொண்டிருந்தது. இலங்கையின் இலக்கியச்சூழலை காட்டுவதாகவும், இலங்கையின் இளமெழுத்தாளர்களுக்கான களமாகவும் அது அமைந்திருந்தது
‘மல்லிகை’ ஜீவா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரை போற்றும்விதமாக நண்பர் முருகபூபதி [ஆஸ்திரேலியா] எழுதியது இக்குறிப்பு
மல்லிகை ஜீவா வாழ்க்கை வரலாறு நூல்- இலவச வாசிப்புக்காக
=================================