தூரன், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

வர வர, எழுத்தாள இடைவெளி குறைந்து, பலரும் தோழமையும், வழிக்காட்டுதலும் தேடி அணுக்கமாய் உணரும் தளத்துக்கு செல்கிறீர்கள் என தோன்றுகிறது. 

“அக்காலகட்டத்தின் களியாட்ட மனநிலையை பின்னர் நான் அறிந்ததே இல்லை. இளமையும் கலைகளும் கலந்து உருவான போதை அது” –

அட, என்ன ஒரு அற்புதமான வெளிப்பாடு!

பலரும் அவரவர் உணரும் தருணங்களை, அவற்றின் நுணுக்கமான ரசனைகளை, கால ஓட்டத்தில் மாறும் சுவை வேறுபாடுகளை வெளிப்படுத்த அறியாதவர்கள். அல்லது அந்த சுவைகளை பதியலாம் என்பதே தெரியாதவர்கள்.

நான் நினைக்கிறேன், அவர்களுக்கெல்லாம் உங்களின் இத்தகைய பதிவுகள் உணர்வு பூர்வமான வடிகால் மட்டுமல்ல, மீண்டும் வாழ்வை திரும்பி பார்த்து சுவை கூட்டிகொள்ளும் கிளர்ச்சியையும் தருமென்று.

நான் உட்பட, எத்தனை பேர் ஒத்த நண்பர்களுடன் இளமை வேகத்தில், கலைகளில் சுவையுடன், சாதிக்கும் கனவுகளுடன் எத்தனைஎத்தனை பேசியிருப்போம், எத்தனை நெகிழ்வோடு அந்த பருவத்தை கடந்திருப்போம் என்பன போன்ற எண்ணங்கள் ஒரு மின்னல் நொடியில் எனக்குள் ஒளிர்ந்தது, அந்த வரிகளை படித்த போது.

நன்றி, ஜெயமோகன்.
சரவணன்,
சிங்கப்பூர்.


http://sarandeva.blogspot.com/

அன்புள்ள சரவணன்

 இணையதளச்சிக்கல் இருந்தபோது நீங்கள் எழுதிய இக்கடிதத்துக்கு நான் பதில் அளிக்கவில்லையோ என்று ஐயபப்டுகிறேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் கடிதம் மகிழ்ச்சி அளித்தது. இளம் வயதில் அனுபவம் குறைவாக இருக்கும்போது கற்பனை அதிகமாக இருக்கிறது. ஆகவே கலைகளின் விளைவுகள் தீவிரமாக இருக்கின்றன. சிறுவயதில் நாம் ஒரு நாடகத்தை அல்லது திரைப்படத்தைப் பார்த்துஅ டைந்த அனுபவத்தை பிறகு ஒருபோதும் அறிய முடிவதில்லை அல்லவா?

ஜெ

 அன்புள்ள ஜெ
பெரியசாமிதூரனைப்பற்றிய கட்டுரையை இப்போதுதான் நான் வாசித்தேன். மிக அருமைமாயாக எழுதியிருக்கிறீர்கள். அந்த மாபெரும் சாதனையாலர் அவர் திராவிட இயக்கத்தின் கூச்சல்களுடன் ஒத்துபோகவில்லை என்ற காரணத்தாலேயே ஒதுக்கபப்ட்டார் என்பது எத்தனை அவலமானது. ஆனால் தமிழுக்கு உண்மையான சேவை செய்தவர்கள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை
முந்தைய கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 5
அடுத்த கட்டுரைஅழிமுகம்:மேலும் கடிதங்கள்