ஜெ
இணையத்தில் வேதா நாயக் என்பவர் இலக்கியநூல்களின் தலைப்புக்களை ஒட்டி வரைந்து, புகைப்படக்கலவை செய்து உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். முகநூல் ஒரு வெட்டி அரட்டைக்கூடம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதைப்போன்ற தீவிரமான முயற்சிகளும் நிகழ்கின்றன. இவை மிகப்பெரிய அளவிலே படைப்புக்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கின்றன. குறிப்பாக இளம் வாசகர்களிடம்
தயா
https://www.facebook.com/vedha.nayak.5?hc_ref=SEARCH&fref=nf
பத்மவியூகம்
ரப்பர்
நீலம்கொற்றவைடார்த்தீனியம்பின்தொடரும் நிழலின் குரல் லங்காதகனம்மேற்குச்சாளரம்
அன்புள்ள தயா,
அற்புதமான கற்பனைகள். இலக்கியமறிந்த ஓவியக்கலைதெளிந்த கலைஞன். ஐயமில்லை. இவரை ஏன் பதிப்பாளர்கள் அட்டைப்படம் அமைப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?
பல படங்கள் அந்நூலைப்பற்றிய ஒரு கனவை எழுப்பி பிற்பாடு அந்நூலைப்பற்றி நினைக்கையில் முதலில் எழுந்துவருவனவாக உள்ளன
ஜெ