ஆஸ்திரேலியா, சூடாமணி -கடிதங்கள்

index

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம், நான் உங்கள் இணையதளத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசிப்பவன் ஆனால் கடந்த ஆண்டு வரை உங்கள் எந்த கதைகளையும் வாசித்தது இல்லை , கடந்த ஆண்டு உங்களின் அறம் சிறுகதை தொகுப்பை வாங்கி வாசித்தேன் அந்த கதைகள் என்னை மிகவும் கவர்த்தந்து அதன் நினைவுகள் பலநாட்கள் என்னுள் உலவிக்கொண்டு இருந்தது அந்த கதை தந்த உற்சாகத்தில் உங்களின் விஷ்ணுபுரம் நாவல் வாங்கி வந்து படிக்க துவங்கினேன் என்னால் முழுதாக 10 பக்கங்கள் கூட படிக்க முடியவில்லை  சில மாதங்கள் அப்படியே போட்டுவிட்டேன் , மீண்டும் இப்பொழுதுதான் வாசிக்க துவங்கினேன் ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு முறை அதற்கு மேலும் கூட வாசிக்கவேண்டி உள்ளது இருந்தாலும் அலுவலக மதிய உணவு இடைவேளையில் அதை படிக்காமல் இருக்கவும் முடியவில்லை, ஆனால் இந்த கடிதம் அதைப்பற்றியது அல்ல.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் திரு.ஆராத்து அவர்களின் புத்தக வெளியிட்டு விழாவில் நீங்கள் திரு. சாரு அவர்களின் கேள்விக்கு அளித்த பதில்லில் எனக்கு உள்ள சந்தேகம் பற்றியது.

சாரு அவர்கள் உங்களிடம் உங்களை நாடு கடத்தினால் எந்த நாட்டுக்கு போவீர்கள் என்று கேட்டார் நீங்கள் சொன்ன பதில் ஆஸ்திரேலியா , அதற்கு விளக்கம் கொடுத்து கடைசியாக ஒன்று சொன்னீர்கள் அது என்னவென்றால் “ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது நான் அங்கு இருந்தால் நானும் அந்த இந்தியர்களை தாக்குவேன்” எனக்கு இந்த பதிலில் உள்ள நுண்ணரசியல் புரியவில்லை இத்தனை நாட்களாக அதற்கு விடை கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்துதேன் முடியவில்லை, என் நண்பர்கள் சிலர் தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள் அவர்களிடம்மும் விடை கிடைக்கவில்லை, நானும் அது சம்மந்தமான செய்திகளையும் புத்தகங்களையும் படித்தேன் என்னால் முடியவில்லை அதனால் தான் இந்த கடிதம் , என்னால் முடிந்தளவு முயற்சித்து பார்த்தேன் விடை கிடைக்கவில்லை நீங்கள் தான் அதன் பின் உள்ள நுண்ணரசியல் என்னவென்று விளக்க வேண்டும் . நீங்கள் இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி

அன்புடன்

M.ரகுவேலன்

***

அன்புள்ள ரகுவேலன்,

ஆஸ்திரேலியா பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். என்னுடைய அவதானிப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஆஸ்திரேலியாவின் கல்விநிலையங்கள் பெரும்பாலும் வணிக அடிபப்டை கொண்டவை.  ஆகவே இந்தியாவின் உயர்குடி, உயர்நடுத்தரகுடிகள் தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்புகிறார்கள். இங்கே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும் , கேளிக்கை என்பது ஒருவகை ரவுடித்தனம் என்னும் எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பவர்கள் அங்கும் அப்படி நடந்துகொண்டு கடும் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்கிறார்கள். இதை பலமுறை ஆஸ்திரேலியாவில் நேரில்கண்டேன்

ஆஸ்திரேலிய ஈழத்தமிழர்கள் சந்திக்காத வன்முறை இந்திய, குறிப்பாக வட இந்திய இளைஞர்கள் மேல் நிகழ்த்தப்படுவதை நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன். பல இடங்களில் அவர்களின் நடத்தையைக் கண்டு நான் கூசிச் சுருங்கினேன்

ஜெ

***

ஆஸ்திரேலியாவில் இனவெறித்தாக்குதல்

 

r.chuda

Dear jeyamohan,

I read Tamil books, but cannot write in Tamil without mistakes as I have not studied Tamil in school. I would love to read books of writer Chudamani. Kindly let me know where in online it is available or which publisher has published majority of her books and selling currently her books in online please.

Thanks,

Sheree

***

அன்புள்ள ஸ்ரீ

நீங்கள் இணையத்தில் சூடாமணி என தேடினாலே நூல்களும் இணையவிற்பனை நிலையங்களும் கண்ணில் படும்

ஆர் சூடாமணி விக்கி பக்கம்

ஆர் சூடாமணி பற்றி ஜெயமோகன்

ஆர் சூடாமணி அழியாச்சுடர்கள்

ஆர் சூடாமணி கதைகள்

ஆர் சூடாமணி கதைகளை கிழக்கு பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. நீங்கல் இங்கே வாங்கலாம்

ஆர் சூடாமணி கதைகள் கிழக்கு

ஜெ

***

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28
அடுத்த கட்டுரைமலையாளத்தில்…