யானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்

rishaan

யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீஃப்

அன்புள்ள ஜெ

ரிஷான் ஷெரீஃப் எழுதிய யானைகளின் மரணம் ஓரு தீவிரமான கட்டுரை போலிருந்தது. ஒரு கடிதத்துக்காகவே இத்தனை தரவுகளையும் படங்களையும் சேகரிக்கிறார். இந்த அளவுக்கான உழைப்பை இங்கே முகநூல் குறிப்பில் நிறைவடைந்துவிடும் கும்பல் செய்வதில்லை. ரிஷான் ஷெரீஃப் தொடர்ந்து எழுதவேண்டும் என விரும்புகிறேன். அவரை தமிழ் செய்தித்தாள்களும் இதழாளர்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

செல்வக்குமார்

***

அன்புள்ள செல்வக்குமார்

ரிஷான் ஷெரீஃப் இலங்கையின் முக்கியமான இளம்படைப்பாளிகளில் ஒருவர்.  முக்கியமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அவற்றை இந்த தளத்தில் வாசிக்கலாம்.

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

அவருடைய சிறுகதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன

ரிஷான் ஷெர்பி சிறுகதைகள்

குறிப்பிடத்தக்க மொழியாக்கங்களும் செய்திருக்கிறார். [ இறுதி மணித்தியாலம்]

ஜெ

***

அன்புள்ள ஜெ

ரிஷான் ஷெரீஃப் எழுதிய யானைகளின் மரணம் உலுக்கிய கட்டுரை. ஒரு பெரிய அதிர்வை இரண்டுநாட்களுக்கு நிலைநிறுத்தியது. எனக்கு நம் சூழியலாளர்கள் கொஞ்சம் ஜாஸ்தியாகச் சொல்கிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. அதாவதுயானைகளின் சிக்கல் மனித வளர்ச்சியில் தவிர்க்கமுடியாதது. மேலும் பஞ்சம் வரட்சி ஆகியவற்றை அவன் அறிந்திருக்கும். தங்கள் பரிணாம ஞானத்தால் கடந்துசெல்லும் என எண்ணினேன்.

ஆனால் நவீன வாழ்க்கை அவற்றை அழிப்பதை பார்க்கையில் பதைக்கிறது. உலகின் பலநாடுகளில் காட்டுவாழ்வே இல்லை. மலேசியா சீனா எல்லாம் அத்தனை காட்டுவிலங்குகளையும் அழித்துவிட்டு நிலத்தை ஃபேக்ட்ரி மாதிரி ஆக்கிவிட்டிருக்கின்றன. இந்தியாவில் இனியாவது விழிப்புணர்வு வரவேண்டும்

சாமிநாதன்

***

அன்புள்ள ஜெ

ரிஷான் ஷெரீஃப் எழுதிய யானைகளைப்பற்றிய கட்டுரை உலுக்கிவிட்டது. அதிலிருந்து சிந்தனையை விலக்கவே முடியவில்லை. அதிலும் செத்துக்கிடக்கும் யானையின் அருகே அதன் வயிற்றிலிருந்த பொருட்கள் கிடக்கும் காட்சி. ஒரு பெரிய குப்பைக்கூடை போலவே இருந்தது. காட்டை நம் குப்பைக்கூடையாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றிவிட்டது

ஜே. ராபின் ரோஸ்

***

அன்புள்ள ஜெமோ

ரிஷான் ஷெரீஃபின் கட்டுரை கூர்மையான அம்பு மாதிரி நெஞ்சில் நிலைத்துவிட்டது. என்ன ஒரு கொடூரமான நிலை. யானைகள் செய்த்துக்கிடப்பதைப் பார்க்கையில் ஒருவகையான பதற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் தோன்றியது தாமிரவர்னியும் இப்படித்தானே இருக்கிறது. அதிலும் இதேபோல குப்பைகள். அதுவும் செய்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இது நம் மூதாதையருக்கு நாம் வைக்கும் நஞ்சு. நாம் பலிச்சோற்றில் விஷம் கலந்தவர்கள்

நெல்லை சங்கர

வாசிப்பு – ஒரு கலை ! : எம்.ரிஷான் ஷெரீஃப்

ம்மாக்களின் நினைவுகள்எம்.ரிஷான் ஷெஃரீப்

எம்.ரிஷான் ஷெரீஃப் வலைத்தளங்கள்

கவிதைகள்
சிறுகதைகள்
எண்ணச் சிதறல்கள்
சிந்திக்கச் சில படங்கள்
விமர்சனங்கள்
உலக நிகழ்வுகள் ஒரு பார்வை

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27
அடுத்த கட்டுரைமலேசியா கடிதங்கள்