படங்கள்

3
படம் பிரபு காளிதாஸ்

வணக்கம்,

என்னுடைய கடிதம் உங்கள் தளத்தில் பிரசுரமானது மகிழ்ச்சி.

இன்னும் ஆழமாய் எழுதியிருக்கலாமே என்று தோன்றியது.

ஏனெனில், டச் ஸ்கிரீன் கவிதை பற்றி நீங்கள் சொன்னதை, என்னால் எங்கும் எப்பொழுதும் வரிவிடாமல் சொல்ல முடியும். அவ்வளவு அழுத்தமாய் சொன்னீர்கள். நானும் மனதின் ஆழத்தில் அப்படியான தருணங்களை தேடினேன். “

மெல்லத் தொட வேண்டிய இடங்களில் எல்லாம் அழுந்தி தொட்டதை நினைத்து வருந்தினேன், வெட்கினேன்.”

குறளினிது கோவை உரை மொத்தம் 6 மணிநேரம் வரும். அதை குறைந்தது 5 முறையாவது கேட்டிருப்பேன்.

அறம் அறக்கட்டளை திருப்பூரில், சுதந்திரதின உரை. ஆகா. இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். தேசத்தை நேசிக்க கற்றுக் கொள்வார்கள் அதைக்கேட்ட பின். எத்தனை தகவல்கள்??!!

என்னைப்போல் கணினி திரை வழியாக மட்டும் வெளியுலகைத் தொடர்பு கொள்பவர்களுக்கு, உங்கள் தளம் அறிவுச்சுரங்கம். எந்த புத்தகம் பற்றி, எந்த தலைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் உங்கள் தளத்தில் தேடிவிட்டு தான் பின்னர் மற்ற பக்கங்களுக்கு போகிறேன்.

உங்கள் வாசகர் சந்திப்பு நிகழ்வுகளை பெரும் வருத்தத்துடனும், சற்றே ஏக்கத்துடனும் வாசிப்பேன். என்னால் வர இயலாது. ஆனாலும், பங்கேற்றோர் பகிர்வுகள் வாசிக்க மகிழ்வாய் இருக்கிறது.

உங்களுடன் உரையாடும் உணர்வை, உங்கள் யூடியூப் உரைகள் தருகின்றன. வாசகர் சந்திப்பில் நீங்கள் ஏதாவது தலைப்பு குறித்து பேசுவதைக்கூட முடிந்தால் யூடியூபில் பகிரலாமே.

இறுதியாய் ஒன்று. அதிகப்பிரசங்கி என்று தோன்றினாலும் பரவாயில்லை.

நேற்று கடிதத்துடன் பிரசுரித்த உங்கள் புகைப்படம், இன்னும் நன்றாய் இருந்திருக்கலாம். யூடியூபில் ஸ்க்ரால் செய்தால், அராத்து விழாவில் பேசியதில் தான் நீங்கள் மிகவும் energetic and enthusiastic ஆக தெரிகிறீர்கள்.

உங்கள் தளத்தில், homepage photo கூட மாற்றலாமே.

நன்றி

பவித்ரா

***

அன்புள்ள பவித்ரா

போட்டோக்களை மாற்றினால் வயதாவது மாறாது. காலம், அதை பிரபஞ்ச விதி என்கிறார்கள் ஞானிகள்

ஜெ

***

அன்புள்ள ஜெ

மீசையுடன் உங்கள் படம் நன்றாக இருக்கிறது. முதலில் வேறு யாரோ போலிருந்தது. ஆனால் கண்களுக்குப் பழகியபின் மிடுக்காகத் தெரிகிறது. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிபோல.

எஸ்

***

அன்புள்ள ஜெ

நீங்கள் புகைப்படங்களைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். குங்குமத்தில் வெளிவந்த ஒரு படம் [முழுப்பக்கம். அந்த நிழல்படம் அல்ல இன்னொன்று] தான் உங்களை எடுத்ததிலேயே பெஸ்ட் படம்

எம்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6
அடுத்த கட்டுரைபெருவெள்ளம்- எதிர்வினை