ஜே.சி.குமரப்பா நூல்கள்

kumara

இனிய ஜெயன்,

வணக்கம்.

வலது, இடது பொருளியல் சிந்தனைக் குழப்பங்கள் குறித்த தங்களின் பதிவு நிறைய பேருக்குக் கோபத்தை உண்டாக்க வல்லது என்றாலும் எனக்கு உவப்பாகவே உள்ளது. உங்களின் சிந்தனைகள் நிறையப் பேரைக் கோபப்படுத்துகிறது. உண்மையின் வேலை அது மட்டுமே.

நிற்க.

பொருளதாரப் பூதத்தின் கையில் சிக்குண்டு சூழல் சீரழிந்துக் கொண்டிருக்கும் போது ஜே.சி.குமரப்பாவின் பொருளியல் சிந்தனைகள் நமக்குத் தேவைப்படுகிறது. இது குறித்து சிலர் எழுதினாலும், நிறையப் பேசி நிறைய எழுதியவர் நீங்கள் மட்டுமே.

அவரது சிந்தனைகள் அனைத்தும் தொகுப்பாக வெளி வந்திருக்கிறதா? எனில், தெரியப்படுத்த முடியுமா?

உங்களின் ஒவ்வொரு நொடியும் பொன்னொடியென கழிவது அறிந்து இந்தத் தயக்கம்.

நன்றி.

தஞ்சையிலிருந்து,

சந்தானகிருஷ்ணன்.

***

kumarappa

அன்புள்ள சந்தானகிருஷ்ணன்

ஜே சி குமரப்பாவின் பல நூல்கள் தமிழில் வெளிவந்துகொண்டிருக்கின்றன

நிலைத்தபொருளாதாரம் – இயல்வாகை வெளியீடு

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம் தொகுப்பு :மா.பா.குருசாமி சர்வோதய இலக்கியப் பண்ணை: 0452- 2341746

தாய்மைப் பொருளாதாரம் காந்திய பொருளியல் அறிஞர், ஜே.சி. குமரப்பா கட்டுரைகள், தமிழில் ஜீவா [பனுவல் சோலை வெளியீட்டகம்,]

இரும்புத்திரையின் பின்னால் … ருஷ்யாவில் குமரப்பா காகா கலேல்கர் தமிழாக்கம் டாக்டர் ஜீவானந்தம்

போன்ற நூல்களை உடனடியாகச் சொல்வேன். சுனீல் கிருஷ்ணன் முயற்சியில் வெளிவரும் காந்தி டுடே இணையதளத்தில் பல கட்டுரைகள் உள்ளன

ஜெ

***

ஜே.சி.குமரப்பா: காந்திய கம்யூனிஸ்ட்

தாய்மைப் பொருளாதாரம்

ஜே.சி.குமரப்பா

குமரப்பா என்ற தமிழர்

 

 

முந்தைய கட்டுரைசோற்றுக்கணக்கு கடிதங்கள்
அடுத்த கட்டுரையார் அறிவுஜீவி?