ஞானக்கூத்தன் அவர்களின் ஆவணப்படத்தின் போது. அவரது இரண்டு கவிதைகளை அதில் இணைக்க முடிவுசெய்தோம். அந்த கவிதைகளை கவிஞரை வாசிக்க வைத்து ஒலிப்பதிவும் செய்தோம். சில காரணங்களால் அதில் ஒரு கவிதை மட்டுமே படத்தில் வெளிவந்தது.
மூன்று வருடங்கள் கழிந்து. அவருடைய தீவிர ரசிகர் , நண்பர் ராஜா சந்திரசேகர் அவர்கள், தனது சுயமுயற்சியில் , பொருட்செலவில், அந்த கவிதைக்கு கிராபிக்ஸில் ஒளிவடிவம் கொடுத்திருக்கிறார். நேற்று அனுப்பி தந்தார்.
ஞானக்கூத்தன் சாரின் குரலை கேட்கும் போது அவருடன் இருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன…
கலைஞர்களை எங்கோ, யாரோ நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் மறைவுக்குப் பிறகும்..
உங்கள் பார்வைக்கு,
அன்புடன்,
வினோத்
ராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்
=============================================================