விளாஞ்சோலைப்பிள்ளை

vilancholai-pillai

அன்புள்ள திரு ஜெயமோகன்,
14ம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் அருகில் வாழ்ந்தவரும், ஈழவ சமூகத்தை சேர்ந்தவரும், மணவாள மாமுநிகளின் ஆசிரியருமான விளாஞ்சோலைப்பிள்ளை பற்றி தாங்கள் அறிவீர்களா என்று தெரியாது.
இவருடைய சப்தகாதை எனும் பாடல் தென்கலையாருக்கு நித்யாநுசந்தானம். இவர் வாழ்க்கை குறிப்பு link கீழே:
அன்புடன்
சாம கிருஷ்ணன்
***

அன்புள்ள கிருஷ்ணன்,

உண்மையில் நான் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. பெயர் காதில் விழுந்துள்ளதை நினைவுகூர்கிறேன். மேலதிகமாக எதுவும் தெரியாது. இப்போதுதான் தெரிந்துகொண்டேன். தமிழிலும் எவரும் இவரைப்பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைநித்யா, நேர்காணல்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனாசார உலகம்