தீ: மேலும் கடிதங்கள்

அன்பு ஜெ சார். தீ மிகவுமே சுட்டது. பசித்தீயைப்போல் வெம்மை அரிது ஒரு வேளை உடல்வேட்கை அருகில் வரலாம். ஒடுங்கிய கண்களும், குழிந்த வயிறுமாய் மனிதர்களைத் தெருவில் பார்க்க வயிறு பற்றி எரியும். யாரைச்சபிக்க என்று அலையும். ஜக்கி வாசுதேவ் சொல்வார் – “பல தேசங்களில் வசதி குறைந்தவர்களைப்பார்த்தால், எப்படியும் ஒரு அளவுக்கு உணவு உண்டிருக்கிறார்களென்பதும், ஒரு அளவுக்கு நேர்த்தியாக உடுத்திருக்கிறார்களென்பதும் புரியும். ஆனால், நம் நாட்டிலோ, தெருவில் சில வறியவர்களின் தோற்றத்தைப் பார்த்தால் நான் வழக்கமாய் உண்ணும் அரை வயிறு உணவு கூட உள்ளிறங்க மறுத்து தொண்டையில் அடைக்கும்” என்று. இரண்டாவது கங்கு, பெண்களின் தலையில் குடும்ப பாரம் விழுவதும், அதைத்தூக்கி சுமக்க அவர்கள் பெண்மையே விலையாவதும். எத்தனை கவிதைகளுக்கும், கலைகளுக்கும் கருப்பொருளாகும் பெண்மை, தாய்மையில் அணà!
 ��டம
் படைத்துக் காக்கும் பராசக்தியாய் விளங்கும் பெண்மை, வறுமையின் பலிபீடத்தில் சிறுமைப்படுவது கொடுமை. தன் விருப்பத்தோடு மட்டுமே, தான் உகந்தவனுக்கு மட்டுமே பரிசளிக்க வேண்டிய உடலும், உணர்வும் காசுக்கு விலை பேச வேண்டிய அவலம். அந்த நிமிடத்தில் அந்த உயிர் அடையும் அவமான உணர்ச்சிக்கு என்னதான் பரிகாரம். பெர்னார்ட் ஷா எழுதினார் – எந்த சமூகத்தில், ஒரு நேர்மையான பணி புரியும் பெண்ணை விட ஒரு பாலியல் தொழிலாளி அதிகம் சம்பாதிப்பாளோ, அங்கே சமூகம் குற்றவாளி, அங்கே கற்பைப்பற்றி  கதை பேச யாருக்கு உரிமை என்று. வறுமையின் மிகக்கொடிய முகம் தனி மனிதருக்கு குறைந்தபட்ச கவுரவம் கூட மறுப்பது. ரகுனாதன்

 

 *

 

அன்புள்ள ஜெ,

தீ கட்டுரை சற்று முந்தித்தான் படித்தேன். பல விதமான எண்ணங்கள் வந்து போயின. அரபுக்கல்யாணம் என்ற விசயத்தைப் பற்றி இங்கே தெலுங்கில் நிறையபேசப்படுகிறது இப்போது. ஏராளமான முஸ்லீம் பெண்கள் இளம் வயதிலேயே இப்படி சட்டபூர்வமான விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதைப்பற்றிய பேச்சுக்களிலே மதகுருக்கள் சிலர் சொல்வதென்னவென்றால் இஸ்லாமில் மறுமணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதனால் அந்தப்பெண்கள் கஷ்டப்படுவதில்லையே என்றுதான். ஆனால் அந்தப்பெண்கள் படும் கஷ்டம் இவர்கள் அறியாதது. அவர்களுக்கு என்ன ஏது என்று தெரியாத வயதிலேயே இதில் இறக்கி விடப்பட்டுவிடுகிறார்கள். அப்புறம் நரகமான வாழ்க்கைதான். அரபுக்கல்யாணம் மூலம் கிடைக்கும் பணத்தில் பாதிவரை நடுவே உள்ளவர்களுக்கு கமிசனாகப்போகிறது என்று சொல்லப்படுகிறது. அந்தப்பெண்ணின் உறவினர்கள் மிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தப்பெண் ஒன்றுமே பெறுவதில்லை. இதுதான் நடக்கிறது. இதை இந்தியாவில் தட்டிக்கேட்க அமைப்புகளே கிடையாது

சங்கர்

 

தீ

தீ:கடிதங்கள்

கடைசிக் குடிகாரன்

துவாரபாலகன்

முதற்சுவை

பூதம்

வேராழம்

 

முந்தைய கட்டுரைமுதற்சுவை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுரலிலில்லாதவர்கள்