யோகமோசடி -கடிதங்கள்

index

 

அன்புள்ள ஜெயமோகன்,

கார்ல் பாப்பரை முன் வைத்து அறிவியல் என்று எப்படி வரையிறுப்பது என மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதி விட்டீர்கள். பாப்பரை நான் இன்னும் முழுமையாக வாசித்ததில்லை அவர் சொன்னதன் சாராம்சம் என்று நான் மற்ற இடங்களில் வாசித்ததை உங்கள் குறிப்பு துல்லியமாக பிரதிபலிக்கிறது.

முன்பொரு முறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன். பதஞ்சலியின் யோக சூத்திரம் பற்றி டேவிட் கார்டன் வைட் எழுதிய புத்தகத்தைப் படித்த போது உங்கள் கட்டுரைகளை சேர்த்தே படித்தேன். உங்கள் கட்டுரைகள் வைட்டின் புத்தகத்தை புரிந்துக் கொள்ள உதவியது.

தினகரனும் பெந்தகோஸ்தே கும்பலும் சுகமளிக்கும் கூட்டங்கள் என்றப் பெயரில் நடத்துவது அப்பட்டமான மோசடி. என்னுடைய தினகரன் கட்டுரை பரவலாக வாசிக்கப்பட்டது. பேஸ்புக்கில் மறுபகிர்வும் செய்தார்கள் பலர். வருத்தமான உண்மை அதைப் பகிர்ந்தவர்கள் பலர் கிறித்தவத்தை வெறுத்து ஒதுக்குபவர்கள். கிறித்தவம் என்றாலே மத மாற்றும் கும்பல் என்றும் இந்து மதத்தை அழிக்க வந்த ஆலகாலம் என்றும் எண்ணுபவர்கள். சில உண்மைகளைப் பற்றிப் பேசும் போது அது துஷ்பிரயோகம் செய்யப்படும் என்பதற்காக மவுனமாக இருக்க முடிவதில்லை.

ரூபா விஸ்வநாதன் எழுதிய ‘The Pariah Problem’ படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். கிறித்தவ மிஷனரிகளுக்கும், அன்று பறையர் என்று குறிக்கப்பட்டவர்களுக்குமான உறவு மிக சிக்கலானது. அவைப் பற்றி இன்று பொதுவெளியில் இருக்கும் கருத்துகள் பலவும் தவறும், தட்டையுமானதும். இரண்டொரு வாரத்தில் முழுவதுமாக எழுத எண்ணம்.

நீங்கள் தஞ்சை செல்வதை படித்தப் போது மகிழ்ச்சியாக இருந்தது. என்ன தான் நாடுதறியமேரிக்கனாக இருந்தாலும் சொந்த ஊர் பாசம் இல்லாமலே போகுமா? ஜடாயு சிவராத்திரியை முன்னிட்டு ஒரு சிவன் சிற்பத்தின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். பார்த்தவுடன் தெரிந்தது பெரிய கோயில் சிற்பமென்று.

அன்புடன்
அரவிந்தன் கண்ணையன்

 

 

அன்புள்ள அரவிந்தன் கண்ணையன்,

 

அறிவியல் பற்றிய இந்த வரிகளை பல மேடைகளில், கல்லூரிகளில் சொல்லியிருக்கிறேன். சொல்லிச்சொல்லி எளிதாகி என்னுடைய கருத்தாகவே ஆகிவிட்டது. கார்ல்பாப்பரை நினைவுறுத்தவேண்டியிருக்கிறது. அந்நூல் ஒரு கிளாஸிக். ஆனால் என்னைப்போன்ற பொதுவாசகனுக்கு அதில் முக்கால்வாசி புரிந்துகொள்ள மிகக்கடினம்,

 

ஜெ

 

 

விவாதப்பொருள் :

  • தினகரன்,சாதுஅப்பாத்துரை, மோகன் சிலாசரஸ் செய்வதுபோல.நித்தியானந்தசுவாமியின்வேதாகம/யோக/கிரியாமுறையைஓப்பிடுதல். அதைமோசடிஎன்றுஉறுதிபடபெயரிடல்.

 

மணி :சுவாமிஜியின்நோய்தீர்க்கும்முறைவேதாகமமரபிலிருந்துஎடுக்கப்பட்டுதற்காலத்திற்கேற்பவடிவமைத்துகொடுக்கப்பட்டயோக/கிரியாமுறைகள். அதற்கானசாஸ்திர/ஆப்த/சாட்சிபிராமணங்களோடுவெளிப்படையானபொதுத்தன்மையோடும்இருக்கிறது.அறிவியல், மேற்குலகமருத்துவஉலகத்தின்பரிமாணத்திலும்ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டு, அவைசொல்லப்படுகிறஅலகுகளாலும்பரிசோதிக்கப்பட்டேஅவைபொதுவெளிக்குஅளிக்கப்படுகின்றன.

 

நம்பிக்கையின்மீதுவிவாதங்கள்வைப்பதுமுடியாததுஎன்கிறபோது      அவநம்பிக்கையின்மீதும், தவறானமுன்முடிவுகள்மீதும், மற்றவர்கள்      ஒருதுறைக்குசெய்கிறபங்களிப்பைஅறியசிறிதுகூடதலைப்படாமல்,       திட்டவட்டமாய்கூறுவதுஅறிவுசார்விவாதத்தின்கதவுகளைமூடி,       சாவியைசமுத்திரத்தில்எறிவதுபோல. அத்தகையவிவாதம்      நடத்துவதென்பதுஎவ்வளவுஆரோக்கியமாகஅமையும்என்றுஐயப்பட  வேண்டியிருக்கிறது. எத்தகையஆராய்ச்சியும், கொடுக்கப்பட்டசுட்டிகளின்      அடிப்படைகூடஅறியமுற்படாமல்போகிறபோக்கில்சகதிஅடித்துவிட்டு போவதும், சினிமாதிரைக்கதைகளில்வருவதுபோன்றஒருமோசமான      ஓப்பீடும்விவாததரத்தைகீழிறக்கின்றது.

 

 

  • ஜெ : ‘அனைத்துநோய்களையும்தீர்க்கும்வழிகளேதும்யோகமரபில்இல்லை “

 

மணி :நோய்கள்தீர்க்கும்வழிகள்யோகமரபில்இருக்கிறது. ( நிறையநண்பர்களின்கருத்துக்களும்தொகுக்கப்பட்டுகொடுக்கப்பட்டிருக்கிறது ). அனைத்துநோய்களையும்தீர்க்கும்வழிஎன்றுசொல்லவில்லை.இந்தந்தநோய்கள், இப்படியானகிரியாக்களின்வாயிலாகதீர்க்கப்படுவதற்கானயோகநுட்பங்கள்கொடுக்கப்பட்டுருக்கிறது.

 

  • சொல்லப்படுகிறயோகசக்திகள் / நுட்பங்கள்/ முடிவுகள் – அறிவியல்( மேற்குலக) முறைப்படியானதா ? அவைமேற்குலகம்சொல்லுகிறமுறைப்படிநிறுவனப்படுத்தப்பட்டிருக்கிறதா ?கார்ல்பைப்பர்சொன்னபடிநிறுவப்பட்டிருக்கிறதா ?

[ அப்படிநிறுவஇயலாதநிலையில் – அதுகூவிவிற்பதே.. ஆகவேஜெமோகன்      முடிவுசுவாமிஜியின்நோய்தீர்க்கும்முறைபால்தினகரன்செய்வதற்குஇணையானது.. சுபம் ]

மணி: சாஸ்திரபிரமாணங்கள்மட்டுமின்றிதற்காலஅறிவியல்/மருத்துவஉலகத்தின்பலபரிசோதனைகளையும், அலகுகளையும், அடிப்படைகளையும், விளக்கங்களையும்சுவாமிஜிதவிர்ப்பதில்லை. தனதுஒவ்வொருசக்திவெளிப்பாட்டின்போதும்ஆய்வுக்குட்படுத்தியபின்பேஅதுபொதுவெளிக்குவருகிறது.அதன்பின்புஅதன்மீதுநடத்தப்படுகிறவிவாதங்கள்/ தாக்குதல்கள்எல்லாம்தாண்டிஅவைமேலும்சீர்செய்யப்படுகின்றன.அறிவியல்/மருத்துவஉலகத்திலும்ஒவ்வொருகண்டுபிடிப்பின்முடிவுகளின்அலகுகள்எவ்வளவு / எதனால்மாறிக்கொண்டிருக்கிறதுஎன்றுபார்ப்பவர்களுக்குஇத்தகையபார்வைகள்/அளவுகோல்களேகேள்விக்குறியதுஎன்பதுஉறுதியானது.

சுவாமிஜின்யோக/கிர்யாமுறைகளைபொறுத்தவரையில்வேதாகமமரபைஅடிப்படையாககொண்டவை, ஏராளமானஆய்வுகளுக்குஉட்படுத்தப்பட்டுமுடிவுக்குவந்தவை( ஏற்கனவேஅதற்கானசுட்டியைஇணைத்திருக்கிறேன்.. ). நிறையயோககுருக்களும் / நிறுவனங்களும்இந்தபணியில்இருக்கின்றனஎன்பதைஜடாயுமற்றும்மற்றநண்பர்கள்தெளிவாககூறியிருக்கின்றனர். (இணைப்பு )

ஜெயமோகன் :எதுஅறிவியல் ? கார்ல்பைப்பரின்அளவுகோலின்படிஜெயமோகன்தொகுத்தது :

 

அபுறவயமானதரவுகளின்அடிப்படையில்கண்டடையப்படும்ஒருகருத்துதான்அறிவியல்உண்மையின்தொடக்கம்

ஆ. அதுஅனைவருக்கும்உரியஅங்கீகரிக்கப்பட்டதர்க்கமுறைபபடிவகுத்துரைக்கப்படவேண்டும்

இ. அதற்குச்சென்றடைந்தவழிகள்அனைவரும்பரிசோதிக்கும்படியாகச்சொல்லப்படவேண்டும். அதாவதுபுறவயமாகஅதுநிரூபிக்கப்படவேண்டும்.

ஈ. அதைபிறர்செய்துபார்ப்பதற்கும்அதேவிளைவைஅடைவதற்குமானமுறைவகுத்துரைக்கப்படவேண்டும். அதாவதுஅதுஒருசிலரால்ஒருசிலசூழலில்ஒருசிலநிபந்தனைகளுக்குட்பட்டுமட்டுமேநிகழ்வதாகஇருக்கக்கூடாது.அதுதிரும்பத்திரும்பநிகழவேண்டும்.ஒவ்வொருமுறையும்ஒரேவகையில்நிகழவேண்டும்.

உ. அதைபிறர்பொய்யென்றுநிரூபிப்பதற்கானவழிமுறைஇருக்கவேண்டும். பொய்ப்பித்தல்வாய்ப்புஇல்லையேல்அதுஅறிவியல்அல்ல

 

மணி :கண்டிப்பாகஇதுசாத்தியமானதே. Emperical evidence, defined in Acceptable, available scientific industry matrix, Reproducable, Replicatable science, space for testing to disprove. கொடுக்கப்பட்டசுட்டிகளில்இதற்கானநிறையதரவுகள்ஏற்கனவேஉள்ளன.சிலதரவுகளைசுருக்கமாகபட்டியிலிடமுயற்சிக்கிறேன்.

  1. யோக/கிரியா/ஆகமமற்றும்குருவின்திட்சையின்போதுஉடம்பில்நடக்கும்மாற்றங்கள்எவையெவை.? அவைவெறும்மனரீதியிலானமாற்றங்களா ?எங்கு, எப்படி, ஏன்இத்தகையமாற்றங்கள்நடக்கின்றன?

ஒருவியாதிக்கானமாத்திரைநமதுஉடலின்என்னென்னவேதியியல்மாற்றங்களைநடத்தும்என்பதுதெரிகிறது.எந்தபாகம்நோய்க்குஎதிரான/ஆதரவானகிருமிகளைஉருவாக்கிறதுஎன்றும்அதன்அடிப்படையானடிஎன்ஏவும்மருந்துகளின்சோதனையில் / கண்டுபிடிப்பில்அடிப்படையானஒன்று.

உதாரணமாக, மைட்ரோகாண்டிரியாஎன்பதுநமதுடிஎன்ஏக்களுக்கும்நுண்னியாதானஅடிப்படைஅலகு.நாம்எந்தநோய்களுக்கும்மருந்துஎடுத்துக்கொள்ளும்போதுஅதன்வேதியல்கூறுகள்மைட்ரோகாண்டிரியாவில்ஏற்படுத்துகிறசக்திமாற்றமேநோய்தீர்க்கவல்லதாகஅமைகிறது.

பொதுவாகசிலமருந்துகள் 30% லிருந்து 50% சதவீதம்வரைஆற்றல்மாற்றத்தைஏற்படுத்துகிறவேளையில்அந்தநோயின்வீரியம்குறைந்து, நோய்அகன்றதாநாம்கணக்கில்எடுத்துகொள்கிறோம்.

சுவாமிஜியின்சிலகிரியாக்கள்/யோகங்கள்/மற்றும்வேறுசிலஆற்றல்சக்திமுறைகள் 1300% மைட்ரோகாண்டரியாக்களின்சக்தியைஅதிகப்படுத்தியிருக்கிறது.இதுபொத்தாம்பொதுவானமுடிவல்ல. முறையாகமருத்துவஉலகம்செய்யும்சாம்பிளிங்டெஸ்டுகள்.அதைகொண்டுமருத்துவஆராய்ச்சிபேப்பர்கள்மருத்துவஉலகில்பப்ளிஸ்செய்யப்பட்டிருக்கிறது.தொடர்ந்துஅவைசெய்யப்பட்டுநிறுவனமாகிவருகின்றன.

இவைவெறும்பக்தர்களுக்குமட்டுமானவைஅல்ல. பொதுவானவை.ஒரேவிளைவைஏற்படுத்தகூடியவை.( ஓவ்வொருவரின்உடல்கூறுக்கேற்பசிலமாற்றங்கள்இருக்கலாம். இதுமற்றமருத்துவத்திற்குபொருந்தும்.)

நான்மருத்துவரல்ல. இதன்அறிவியல்இம்மிபிசகாமல்மற்றமருத்துவர்களால்ஆராயப்பட்டு, பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டுஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.அதற்கானசுட்டிகளைகொடுத்துள்ளேன்.

இதுபோலவேமூன்றாம்கண்விழிப்படைதல்.Third eye awakening.மருத்துவஉலகம்பினைல்க்ளாண்டுஎன்றுசொல்கிறஉறுப்புசம்பந்தமானவிடய்ங்கள். அதைவிழிப்படையச்செய்தல்மூலம்மனிதனின்அகவிழிப்புணர்வுவிழிப்படைவதால்புறவயத்தில்ஏற்படுகிறமாற்றங்கள்பற்றியபங்களிப்பு.அதுசார்ந்தசாஸ்திர/ஆத்ம/ஆப்த/ சாட்சிபிராமணங்களோடுநிறுவப்பட்டிருக்கிறது. இவைகள்மற்றவைகள்போலவேவளரும்அறிவியில்என்பதையும்நாம்கணக்கில்கொள்ளவேண்டியிருக்கிறது.

இவ்வளவுபங்களிப்புசெய்தவரைமோசடிஎன்றுசொல்வதற்கும், தினகரன்வகையாறாக்கள்ஒப்பிடுவதற்குமானகாரணங்கள்கண்டிப்பாகஅறியாமையாஇருக்காது.பின்எந்தவெறுப்பின்/மதிப்பின்நிழலைபின்தொடர்கிறீர்கள்என்றுயோசிக்கவைக்கிறது.ததாஸ்து.

இதுவெறும்சுருக்கமானபதில்மட்டுமே.

நிறையஅறிவியல்விவரங்களோடும்தொடர்புகொள்கிறேன்.

 

மணி ராமலிங்கம்

 

 

அன்புள்ள மணி

 

நாம் இதைப்பற்றி மட்டும் அல்ல எதைப்பற்றியும் மேலே விவாதிக்கமுடியாதென நினைக்கிறேன்

 

நித்யா இருந்தபோது நாளுக்கு ஒருவர் வருவார்கள். வாயிலிருந்து சிவலிங்கம் பெற்றவர்கள், கையிலிருந்து விபூதி பெற்றவர்கள், பறக்கும் சாமியார்கள் தீவிழுங்கிச்சாமியார்களின் பக்தர்கள்

 

நித்யா பொதுவாக ஆசியளித்து அனுப்பிவிடுவார். எதையுமே சொல்வதில்லை. விவாதிப்பதில்லை. அது அவர்களை அவமதிப்பது, ஏன் அவர்களிடம் உண்மையைச் சொல்லக்கூடாது என்று கேட்டிருக்கிறேன்

 

ignorance earned .என அதைப்பற்றிச் சொன்னார் நித்யா. கடுமையாக உழைத்துத் தேடிச்சேர்ந்த அறியாமை. அது வழித்துணையாக அமையுமென்றால் வாழ்க. நன்றி

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–38
அடுத்த கட்டுரைபனித்தமிழ்