அன்புள்ள ஜெ,
இந்த செய்தியை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இது நடந்தது எங்கள் பகுதியில்தான். இந்தக் குழந்தைக்கு நடந்துள்ள கொடுமையைப் நினைக்க நினைக்க மனம் வெறுக்கிறது.
அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சந்தேகிக்க முடியாத ஒரு கொடூரனால் இந்தக் கொடுமை நடந்துள்ளது. அவன் முகத்தை பார்க்க பார்க்க இன்னும் பயமாக இருக்கிறது. கண்டிப்பாக சந்தேகம் கொள்ளமுடியாத வாலிபன். ஆனால் மனதில் இவ்வளவு பெரிய கொடுரம் மறைந்துள்ளது. ஆண் என்ற கொடூரம்.
அந்தப் பகுதி காவல்துறை அலுவலர்கள் தகவல் தெரிந்த உடனேயே சுறுசுறுப்பாக செயல்பட்ட்னர். இப்போது பிடித்தாகிவிட்ட்து. ஆனால் என்ன தண்டனை இதற்கு போதுமானது. என்ன தண்டனை கொடுத்தான் நம் மனம் ஆறும்.
என் மனதில் ஜெயத்ரதனையும் அவன் படைகளையும் துவம்சம் செய்யும் பீமன் என்னவனாக இருக்கிறான். பீமன் மட்டுமே சரியானவனாக இருக்கிறான். திரும்ப திரும்ப இந்த இரண்டு பகுதிகளையும் படிக்கிறேன்.
//மூடா, ஒட்டுமொத்த ஆண்குலத்தை அழிக்கிறேன். அழிக பாரதவர்ஷம், அழிக இப்புவி!” என்று வெறியெழுந்த கண்களில் வழிந்த கண்ணீருடன் இளித்த வாய்கொண்ட முகத்துடன் கூவினான். அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. நிணம் வழுக்கி உதிர்ந்தது. “இழிமக்கள்… கீழுயிர்கள்… செத்துக் குவியட்டும் இவர்கள். ஆண்குறி கொண்டிருப்பதனாலேயே சாகத்தக்கவர்கள்… மீசை கொண்டிருப்பதனாலேயே கீழுலகில் நெளியவேண்டியவர்கள்” .//
http://www.jeyamohan.in/95061#.WJv2oW996M8
http://www.jeyamohan.in/95137#.WJv2mG996M8
சுரேஷ் பாபு