அ.முத்துகிருஷ்ணன் பாலஸ்தீனப் பயணம்

உயிர்மையில் எழுதிவரும் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நண்பராக இல்லாத தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்செயல்பாட்டாளர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள். எவருக்கும் எப்போதும் இன்முகத்துடன் உதவக்கூடியவர். மனம்திறந்து பேசக்கூடியவர்.

ஆனால் முத்துக்கிருஷ்ணன் உறுதியான அரசியல் கருத்துக்கள் கொண்டவர். அவரை அமைப்புசாரா இடதுசாரி என்று சொல்லலாம். இடதுசாரி இயக்கங்கள் அனைத்துக்கும் சகப்பயணி. களப்பணியாற்றும் காந்திய இயக்கங்களுடனும் நெருக்கமான உறவுள்ளவர். இந்திய அரசியலையும் வரலாற்றையும் இடதுசாரி நோக்குடன் அணுகி முக்கியமான கட்டுரைகள் எழுதிவரும் அ.முத்துகிருஷ்ணன் இன்று தமிழில் மிக அதிகமாக கவனிக்கப்படும் அரசியல் எழுத்தாளர்களில் ஒருவர்.

முத்துக்கிருஷ்ணனின் ஆளுமையில் என்னை எப்போதுமே கவரும் அம்சங்கள் அவருக்கு பேச்சு எழுத்து இரண்டுக்கும் மேலாக செயல்பாடுகள் மீது இருக்கும் ஆர்வம். சாதாரணப் பொதுமக்களிடம் இருக்கும் இயல்பான நேரடித்தொடர்பு. நூற்றுக்கணக்கான நட்புகள். இப்பண்புகள் பொதுவாக எழுத்தாளர்களிடம் மிகவும் குறைவு

அ.முத்துகிருஷ்ணன் வரும் ஜனவரியில் பாலஸ்தீன ஆதரவுக்குழு ஒன்றுடன் இணைந்து தரைவழியாக பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஈரான் வழி பாலஸ்தீனம் வரைச் செல்லவிருக்கிறார். இந்தியா,வங்கதேசம், மலேசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த பாலஸ்தீன ஆதரவாளர்களான அறிவுஜீவிகள் நடத்தும் பயணம் இது.

முத்துக்கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்

அ. முத்துகிருஷ்ணன் – பாலஸ்தீனத்தை நோக்கி…
சில பதிவுகள்

எஸ்.ராமகிருஷ்ணன்

அ.முத்துலிங்கம்

கடற்கரய்

எம்.ஏ.சுசீலா

முந்தைய கட்டுரைசூழியல்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைநந்தலாலா இரு கடிதங்கள்