செய்தியாளர்கள் -ஒரு கடிதம்

ஜெ,

இது மிக நீளமான வீடியோ. முடிந்தால் முழுமையாக பார்க்கவும். அல்லது நிமிடம் 20 லிருந்து பார்க்கவும்.
10 வருடங்களுக்கும் மேலாக ஜல்லிகட்டுக்காகப் போராடி வரும் வழக்கறிஞர் திரு. அம்பலத்தரசு ஜல்லிகட்டு தொடர்பான ordinance பற்றி மிகத்தெளிவாக தமிழில் சட்டநுணுக்கங்களை விளக்குகிறார். அங்கிருந்த செய்தியாளர்களால் இதை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. சார் நீங்க வளவளன்னு பேசுறீங்கன்னு அவரை மொக்கை செய்கிறார்கள். அவர் வேற உங்களுக்கு தெரியும் என்று அடிக்கடி சொல்கிறார். அவருக்கு தெரியாது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இவர்களுக்கு தேவை ஒரு தலைப்பு செய்தி அல்லது ஒரு வதந்தி.
இதை கூட தமிழில் விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்று நினைத்தால் கவலையாக இருக்கிறது. டிவி சேனல்கள் பணத்தில் கொழிக்கின்றன. ஆனால் தரமோ மற்ற அனைத்து ஊடகங்களையும் விட மிக மோசம்.
ராஜ்
முந்தைய கட்டுரைநஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள்
அடுத்த கட்டுரைதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’